FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on December 23, 2014, 12:01:37 PM

Title: ~ உடற் கழிவுகளே நோய் வளர்க்கும் களமாகும்! ஒன்பது துளைகளின் உன்னதம் அறிவீர் ~
Post by: MysteRy on December 23, 2014, 12:01:37 PM
உடற் கழிவுகளே நோய் வளர்க்கும் களமாகும்! ஒன்பது துளைகளின் உன்னதம் அறிவீர்

நம் உடலுக்கு வாய் துளை ஒன்று, மூக்குத் துளைகள் இரண்டு, கண்கள் இரண்டு, காதுகள் இரண்டு, பிறப்புறுப்புத் துளை ஒன்று மற்றும் ஆசனவாய்த் துளை ஒன்று ஆகிய ஒன்பது துளைகளை இறைநிலை அமைத்துத் தந்திருக்கிறது. இந்தத் துளைகளுக்கென்று தனிப்பட்ட பயன்பாடுகள் இருந்தாலும் எல்லாத் துளைகளும் உடற்கழிவு வெளியேற்றத்தில் உன்னத பங்கு வகிக்கின்றன. உடற் கழிவேற்றத்தில் இந்தத் துளைகளின் அற்புதம பங்களிப்பை ஒவ்வொன்றாக இனிப் பார்ப்போம்.

1 * வாய்:

நம் உணவான திடப்பொருள் விஷத் தன்மையால் (அதீத நெருப்பால்) கெடும்போது வாந்தியாகவும், ஆகாச சக்தியால் கெடும்போது செரிமானம் குறைபட்டு நாக்கில் மஞ்சள் படலமும் புளியேப்பமும், காற்று கெடும்போது கொட்டாவி மற்றும் இருமளாகவும், நீர்த்தன்மை கெடும்போது நாக்கில் வெண் படலமும் வாயில் நீர் கோழையும், வெளிப்படுகின்றன. ஆக, நம் வாயானது நாம் உண்ட உணவின் கழிவுத் தன்மைக்கு ஏற்பவே வேளிப்பாடு காட்டுகிறது.

2* மூக்கு:

நம் நெஞ்சுக் குழிக்குள் காற்றானது நீர்க்கழிவால் கெடும்பட்சத்தில் அது மூக்கு மற்றும் வாய் வழி சளியாக வெளிப்படுகிறது. அதுவே நம் காற்றானது வெளிப்புற திடப்பொருளால் (தூசு மற்றும் துகள்களால்) கெடும்போது நமக்கு அலர்ஜி மற்றும் ஆஸ்துமாவாக வெளிப்படுகின்றன. இவ்வித கழிவுகளை வெளியேற்றவே மூக்கு மற்றும் நுரையீரலின் உட்புறச் சுவற்றில் உள்ள சவ்வூடு பூச்சானது (Epithellial linning) கிருமியின் உதவியைக் கொண்டு காற்று கழிவுகளை சளிக் கோழையாக மாற்றி வெளியேற்றம் செய்கிறது.

3* கண்கள்:

நம் உடலின் நெருப்பு சக்தி ஆகாச சக்தி குறைவால் கெடும்போது (சோகம் மற்றும் வருத்தம் அடையும் போது) நம் கண்களில் கண்ணீர் வருகிறது. அதே போல ஆனந்தத்தால் ஆகாச சக்தி மிக அதிகமாகும் போதும் நம் கண்களில் கண்ணீர் வரும். அப்படி கண்ணீர் வெளிப்படும் போதெல்லாம் நம் கல்லீரலின் அசுத்தம் நீக்கப்பட்டு புத்துணர்வு பெறுகிறோம். துன்பத்திலும் அதீத ஆனந்தத்திலும் அழாதவர்களுக்குத்தான் கண் அழுத்த நோய் (Glucoma) மற்றும் கண் வரட்சி நோய்கள் ஏற்படுகின்றன.

4* காதுகள்:

நம் உடலில் ஆகாச சக்தியானது நீரால் கெடும்போது சீழாகவும், நெருப்பால் கெடும்போது குரும்பியாகவும், காது வழி வெளிப்படுகிறது. அதே ஆகாச சக்தியானது காற்றால் கெடும்போது சைனஸ் (Sinus) அடைப்பாக வெளிப்படுகிறது.

5* ஆசனவாய்:

நம் செரித்த உணவின் இரசமானது, மண்ணீரல் (நீர்) சக்தியிழப்பால் வயிற்றுப் போக்காகவும் (Diarrhoea), கல்லீரல் (ஆகாச) சக்தியிழப்பால் சீதபேதியாகவும் (Dysentery), நுரையீரல் (காற்று) சக்தியிழப்பால் வாய்வு பிரிதலாகவும், இருதய (நெருப்பு) சக்தியிழப்பால் வறண்ட கருத்த வலியுடன் கூடிய இருக்கமான மலமாகவும் ஆசனவாய் வழியே வெளிப்படுகின்றன.

6* பிறப்புறுப்பு:

நம் உடலின் நீர்ப் பொருளானது நெருப்பால் கெடும்போது சிறுநீர் தொற்றாகவும், காற்றால் கெடும்போது வியர்வையாகவும், ஆகாசத்தால் கெடும்போது கண்ணீராகவும், திடப்பொருளால் கெடும்போது சிறுநீரக கற்களாக சிறுநீர்ப் பாதையில் வெளிப்படுகின்றன. அடுத்து, உடலின் திடப்பொருளான விந்து (ஆண்களில்) நீர்ச் சக்தியை இழக்கும்போது நீந்தும் தன்மையை இழந்தும் (Immotile), நெருப்புத் தன்மையை இழக்கும்போது வீரியம் குறைந்தும் (Reduced vitality), காற்று சக்தியை இழக்கும்போது வேகம் குறைந்தும் (Reduced agility), ஆகாச சக்தியிழக்கும்போது உயிரற்றும் (Aspermocytes) விந்துக்கழிவாக பிறப்புறுப்பு வழியே தன்னிச்சையாக வெளிப்படுகிறது. இதுவே பெண்களிடத்தில் திடப்பொருளான நாதம் (கருமுட்டை) நீரால் கெடும்போது வெள்ளைப்பட்டும், நெருப்பால் கெடும்போது அதிக இரத்தப்பட்டும், காற்றால் கெடும்போது வலி அதிகப்பட்டும், ஆகாச சக்தி கெடும்போது மாதப்போக்கு அற்றும் மாதவிடாய் சுழற்சியில் நாதக் கழிவாக வெளிப்படுகிறது.

உடற் கழிவுகளே நோய் வளர்க்கும் களமாகும்!

உளம் உணர்ந்து, கழிவகற்றி வாழ்வோம் வளமாக!