FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: ஸ்ருதி on December 17, 2011, 07:22:39 PM

Title: வாழ்க்கைக்குப் பொருத்தமான தமிழ் பொன்மொழிகள்
Post by: ஸ்ருதி on December 17, 2011, 07:22:39 PM
வாழ்க்கைக்குப் பொருத்தமான தமிழ் பொன்மொழிகள்

மிகக் கடினமானவை மூன்றுண்டு

1. இரகசியத்தை காப்பது.
2. இழைக்கப்பட்ட தீங்கை மறப்பது.
3. ஓய்வு நேரத்தை உயர்ந்த வழியில் பயன்படுத்துவது.

நன்றி காட்டுவது மூன்று வகையிலாகும்

1. இதயத்தால் உணர்தல்.
2. சொற்களால் தெரிவித்தல்.
3. பதிலுக்கு உதவி செய்தல்.

பெண்மையை காக்க மூன்றுண்டு

1. அடக்கம்.
2. உண்மை.
3. கற்பு.

மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரியவை மூன்றுண்டு

1. சென்றதை மறப்பது.
2. நிகழ்காலத்தை நேர்வழியில் செலுத்துவது.
3. வருங்காலத்தைப் பற்றிச் சிந்திப்பது.

இழப்பு மூன்று வகையிலுண்டு

1. சமையல் அமையாவிட்டால் ஒருநாள் இழப்பு.
2. அறுவடை சிறக்காவிடில் ஓராண்டு இழப்பு.
3. திருமணம் பொருந்தாவிட்டால் வாழ்நாள் முழுவதும் இழப்பு.

உயர்ந்த மனிதனின் வாழ்வு மூன்று வகையில் இருக்கும்

1. அவன் ஒழுக்கத்தோடிருப்பதால் கவலையற்றிருப்பான்.
2. அவன் அறிவாளியாயிருப்பதால் குழப்பங்களற்றிருப்பான்.
3. அவன் துணிவாக இருப்பதால் அச்சமின்றியிருப்பான்.

Title: Re: வாழ்க்கைக்குப் பொருத்தமான தமிழ் பொன்மொழிகள்
Post by: Global Angel on December 17, 2011, 07:52:43 PM
நல்ல தகவல் சுருதி ... ஆம் திருமணம் என்பது சரியாக அமையாவிட்டால் இழப்பு என்பது காலத்துக்கும் ..... எங்க ஒன்னும் அமையுறத காணம்... தேடிட்டு இருக்கேன் ...ஹ்மம்ம்மம்ம்ம்ம்