FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on December 22, 2014, 01:34:18 PM

Title: மனிதன் இளைப்பாறும் இடம்
Post by: thamilan on December 22, 2014, 01:34:18 PM
ஓடி ஓடி ஓடியே
ஓடிக் கலைப்பதே
ஓடையின் லட்சியம்
ஓடும் ஓடைக்குக் கூட
ஓய்வெடுக்க ஓரிடம் உண்டு
அது கடலுடன் கலப்பது

மானிடா நீயும்
ஓடி ஓடி ஓடியே
ஓடிக் களைகிறாய்
பருவம் வந்தது முதல்
முதிர்ந்து உதிரும் வரை
உனக்கும் இளைப்பாற ஓரிடம் உண்டு
அது கல்லறையே