FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on December 21, 2014, 02:06:38 PM

Title: ~ இதயத்தின் அமைப்பும் இயக்கமும் ~
Post by: MysteRy on December 21, 2014, 02:06:38 PM
இதயத்தின் அமைப்பும் இயக்கமும்

நமது மார்புக் கூட்டுக்குள் கொஞ்சம் இடதுபக்கமாக இதயம் அமைந்துள்ளது. இடைவிடாமல் தொடர்ந்து இயங்கி, ரத்தத்தை உடல் முழுவதும் பரவச் செய்கிறது. இவ்வாறு உடல் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கும் தேவையான ரத்தத்தை எடுத்துச் செல்லும் பெருங்குழாய்க்கு ‘பெருந்தமனி’ என்று பெயர்.
இந்த பெருந்தமனி, இதயத்தின் இடது கீழ் அறையிலிருந்து கிளம்பி, பிறகு பல்வேறு கிளைகளாகப் பிரிந்து உடல் முழுவதும் ரத்தத்தை எடுத்துச் செல்கிறது. அதேபோல், உடல் திசுக்களின் சேரும் அசுத்தங்களும், கரியமில வாயுவும் ‘கார்பன் & டை&ஆக்ஸைடு) கலந்த ரத்தம், சிரைக் குழாய்கள் வழியே இதயத்தின் வலது மேல் அறைக்கு வந்து சேரும்.

இதயத்தின் வலது கீழ் அறையிலிருந்து செல்லும் நுரையீரல் ரத்தக் குழாய்கள், வலது & இடது எனப் பிரிந்து முறயே வலது மற்றும் இடது நுரையீரலுக்குச் செல்கின்றன. அங்கு, உள் இழுக்கப்பட்ட மூச்சுக்காற்றில் உள்ள ஆக்ஸிஜன் வாயுவால் ரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. வெளிவிடும் மூச்சுக் காற்றின் மூலம் ரத்தத்தில் உள்ள அசுத்தம் வெளியேற்றப்படுகிறது.
இவ்வாறு சுத்தப்படுத்தப்பட்ட ரத்தம், இதயததின் சுருங்கி விரியும் தன்மையால், பெருந்தமனி மூலம் மீண்டும் உடலின் பல்வேறு பகுதிகளுக்கும ‘செலுத்தப்படுகிறது’ & இப்படி, இதயம் சுருங்கி விரியும் ஒவ்வொரு முறையும் உடல் முழுவதும் ரத்தம் பரவுகிறது.