FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on December 19, 2014, 01:59:32 PM

Title: ~ நோய்களுக்கு காரணமான மலச்சிக்கல் ~
Post by: MysteRy on December 19, 2014, 01:59:32 PM
நோய்களுக்கு காரணமான மலச்சிக்கல்

நமக்கு உடல் நலம் சரியில்லாத நேரங்களில் மருத்துவரை அனுகும் போது மருத்துவர் கேட்க்கும் முத்ற்கேள்வி மலம் சரியாக வெளியேறுகிறதா என்றுதான். நோய்களின் முதற்காரணம் மலச்சிக்கல் என்பதை நாம் அறியவேண்டும்.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
என்ற திருக்குறளை நினைவுகூருங்கள்.

ஒருவன் உண்ட உணவு செரித்துவிட்டது என்பதை அறிந்தபின் உண்டால்,அவன் உடலுக்கு மருந்து எதுவும் தேவைவில்லை என்பதாகும்.
முன்னே நாம் உண்ட உணவு நன்றாக ஜீரணமாகிவிட்டது என்று அறிந்தபின்பு, நாம் உண்ணத்தகுந்த உணவினை அளவோடு உண்ண வேண்டும்.
சைவ உணவுகளை உண்பவர்கள் குறிப்பாக காயகறிகளை அதிகம் உண்பவர்கள் மலச்சிக்கலால் பாதிப்படைவதில்லை ஆனால் புரதம் அதிகம் கொண்ட மாமிச உணவுவகைகளை உண்பவர்கள் மலச்சிக்கலுக்கு உள்ளாகிறார்கள்.

நார்ச்சத்துள்ள உணவுகள்

உப்புச்சுவை மற்றும் காரச்சுவை இரண்டும் மலச்சிக்கலை நீக்குகின்றன. அதுபோல் நார்ச்சத்துள்ள உணவுகள் மலச்சிக்கலை நீக்குகின்றன. நார்ச்சத்துள்ள உணவு ஜீரணமாகத் தாமதமாகும் என்றாலும், தன்னுள் அதிக தண்ணீரைச் சேர்த்து வைக்கும் தன்மை உடையது எனவே மலம் வெளியேற இது உதவுகிறது.
மலம் வெளியேறாமல் உடலில் கழிவுகள் தங்குமானால் அவை ரத்தத்தோடு கலந்து, நாளடைவில் நோய்களை உருவாக்குகின்றன.
இருதய நோயாளிகள் ஆஸ்த்துமா, காச நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் போன்றோருக்கு மலச்சிக்கல் உண்டானால்,பெரிய ஆபத்தாய் முடியும் எனவே முறையான உணவு முறை மற்றும் உடற் பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது

அதிகாலையில் பல்துல்க்கியபின் இரண்டு மூன்று டம்ளர் தண்ணீர் பருகிவர மலச்சிக்கல் தீரும் அதிகாலை மட்டுமின்றி தினமும் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் பருகுங்கள். முடிந்தளவு பழச்சாறு அருந்தலாம்.

மிளகு ஜீரணப் பையில் நன்றாக வேலை செய்வதால் மிளகும் வெல்லமும் சமபாகம் கலந்து அரை ஸ்பூன் உண்டு வர நன்றாக ஜீரணமாகும், மலச்சிக்கலைத் தடுக்கலாம்
மிளகு சீரகம் கலந்து பொடித்து 10-20 கிராம் சாப்பிட்டு வந்தால் அஜீரணம் மற்றும் மந்த ஏப்பம் போன்றவை குணமாகும்.

அத்திப்பழம் மலத்தை வெளியேற்றுவதில் சிறந்த பங்கு வகிக்கிறது.

சுக்கு பொடியை சிறிது உணவில் கலநது உண்டால் அஜீரணம் குணமாகும் மலமும் நன்றாக வெளியேறும். சுக்கு பொடியை ஒரு டம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் கலந்து கொதிக்க வைத்து, பின் தேவையான அளவு பாலும் சரக்ரையும் கலந்து குடித்து வந்தால் மலச்சிக்கல் குணமாகும்

வெந்தய கீரையை உணவில் சேர்த்து வந்தால் மலச்சிக்கல் தீரும்.

கோதுமை, தானியங்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற நார்சத்துள்ள உணவுவகைகளை சேர்த்துக்கொள்வதால் இறுக்கமான மலத்தை இளக்கப் பயன்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தினமும் முறையான உடற்பயிற்சி செய்வது நல்லது. தேவையற்ற மருந்துகளையும்,மாத்திரைகளையும் நீங்களே சாப்பிடுவதை தவிர்த்து மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ளுங்கள்.
மலச்சிக்கலுக்காக தொடர்ந்து பேதி மருந்துகளை எடுக்கக்கூடாது அது நல்லதல்ல. குறித்த நேரத்தில் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.