FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on December 19, 2014, 01:23:53 PM

Title: ~ நவநாகரீகம் என்ற போர்வையில் மதுவுக்கு அடிமையாகும் பெண்கள் ~
Post by: MysteRy on December 19, 2014, 01:23:53 PM
நவநாகரீகம் என்ற போர்வையில் மதுவுக்கு அடிமையாகும் பெண்கள்

ஆண்களின் குடிநோய் அதிர்ச்சி எனில், பெண்களின் குடிநோய் பேரதிர்ச்சி. பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே குடித்த காலங்கள் கடக்கப்பட்டு, இன்று குடிக்கும் பெண்களின் சதவிகிதமும் அதிகரித்து வருவதன் காரணிகள் என்ன?…

பெரும்பாலான பெண்கள் கணவரின் குடிநோயாலேயே மதுவுக்கு அடிமையாகியிருக்கிறார்கள் என்பது மட்டும் தெளிவாகிறது. இன்று தமிழகத்தின் அநேக மதுக்கடைகளில் பெண்கள் மது அருந்தும் காட்சிகளெல்லாம் அதிர்ச்சிக்கு அப்பாற்பட்டவையாகிவிட்டன. ‘நல்லா தூக்கம் வரும்’, ‘சளிக்கு நல்லது’, ‘குழந்தை புஷ்டியா பொறக்கும்’, ‘வலி தெரியாது’ என்பன போன்ற தூண்டில் வார்த்தைகளே பெண்களை மதுவின் வலையில் சிக்கவைக்கின்றன.

இதைத் தவிர்த்து, குடும்பங்களிலேயே கட்டாயப்படுத்தி வாயில் மதுவைத் திணிக்கும் செயல்களும் உண்டு. தென் மாவட்டங்களில் சில ஊர்களில் செங்கல் சூளை, கட்டிட வேலை, வயல் வேலை செய்யும் பெண்களில் பலரும் கூலியுடன் மதுபாட்டில் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள் என்கிறார்கள். பாலியல் உறவு வைத்துக்கொள்ளும்போது மட்டும் கணவர் குடிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்துகிறார் என்கிறார்கள் சில பெண்கள்.

மது அருந்திவிட்டு உடலுறவு கொள்வது என்பது ஆரோக்கியமானதல்ல என்பது மட்டுமல்ல, ஆபத்தானதும்கூட. பாலியல் உறவின்போது ரத்த ஓட்டம், ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு அதிகரிக்கும். தவிர, உணர்ச்சி வசப்படும் தன்மை பெண்களுக்கு அதிகம். அப்போது மதுவின் வீரியமும் சேர்ந்துகொள்வதால் ரத்த அழுத்தம் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதயத்துக்குச் செல்லும் ரத்தநாளங்களில் அழுத்தம் அதிகமாகி வெடிக்கலாம். தொடர் அழுத்தங்களால் இதயத்தில் ஓட்டை விழலாம். தாறுமாறாக இதயம் துடிப்பதால் மாரடைப்பு ஏற்படலாம். மது பழக்கத்தை சமூகமும் ஏற்றுக் கொள்வதில்லை. நம் உடலும் ஏற்றுக் கொள்வதில்லை.

பின் ஏன் இந்த பழக்கம்? போதையின் பாதையில் எதிர்காலம் எட்டவே முடியாத அளவுக்கு தொலைதூரமாகி விடும் என்பதை சமூக அமைப்பில் உள்ள பெண்கள் உணர்த்தி வருகிறார்கள். இது தொடர்ந்தால் ‘ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்‘ என்பது பாட்டோடு மட்டும் நின்று விடும்.