FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on December 14, 2014, 05:10:55 PM
-
உன் கைகளில் - மார்கழி மாத கதகதப்பு
உன் உடலில் - மல்லிகைப்பூவின் கமகமப்பு
உன் கண்களில் - நிலா வெளிச்சத்தின் வெதுவெதுப்பு
உன் இதழ்களில் - பூவின் மெதுமெதுப்பு
இயற்கையும் நீயும்
ஒன்றல்லவா
இதயத்தில் பதியும்
நினைவல்லவா
இரு ஜோடிக் கண்களின்
இரகசியப் பார்வை.........
இரண்டு இதயங்களின்
இன்னிசை சங்கமம்...........
இரு மனங்களின்
மௌன போராட்டம்..........
நான்கு உதடுகளின்
அகிம்சை அவஸ்தை.........
இருபது விரல்களின்
இம்சை யுத்தம்.........
இவை யாவும்
காதலின்
இதய நரம்புகளை மீட்டுகிற
அழகான காட்சி
அற்புத சாட்சி
அன்பு + ஆனந்தம் = காதல்
கனவு + ஆசை = காதல்
சோகம் + கண்ணீர் = காதல்
பிரிவு + சந்தேகம் = காதல்
கணக்கு பண்ணுவது மட்டும்
காதல் அல்ல
கணக்காய் வாழ்ந்தால்
காதல் தவறுவதில்லை
-
அழகிய பதிப்பு !!
ஜோடி - சோடி