FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on December 13, 2014, 03:56:30 PM

Title: வரதட்சணை வாங்கும் வாலிபர்கள்
Post by: thamilan on December 13, 2014, 03:56:30 PM
ஓ வாலிபனே
வரதட்சணை என்பது என்ன
உனக்கு நீயே
நிர்ணயக்கும் விலை தானே

கல்லூரி பட்டத்தை
கல்யாண மேடையில்
நீ காசாக்குவதை கேள்வியுற்று
வீணை சரஸ்வதியும்
விக்கி விக்கி அழ போகிறாள்

வரசட்சணை
முள் கிழித்த பாதங்களில்
வழியும் ரத்தத்தோடு
மனைவியாய் ஒரு பெண்
உன் வீட்டினுள் நுழைவதை
விரும்புகிறாயா நீ ......

வரதட்சணை
விளக்கை கொளுத்த இயலாத
எத்தனயோ பெண்கள்
தம்மையே கொளுத்திக் கொண்ட
வெளிச்சத்திலுமா
கண் திறக்கவில்லை இந்த
குருட்டு சமூகம்

உன் பெற்றோருக்கு
மகனாகவே இரு
மனைவியை தேர்ந்த்தெடுக்கும்
போது மட்டும்
மறக்காமல் ஒரு
மனிதனாக நடந்துகொள்
ஓடிப் போய்
பெற்றோரின் பின்னாலே
ஒளிந்து கொண்டால்
ஆடைகளால் மட்டுமே
நீ ஆண்மகன்.........
   
Title: Re: வரதட்சணை வாங்கும் வாலிபர்கள்
Post by: aasaiajiith on December 16, 2014, 01:14:21 PM
எண்ணம் எழில் !!
Title: Re: வரதட்சணை வாங்கும் வாலிபர்கள்
Post by: gab on December 22, 2014, 10:16:15 AM
இப்பொழுது ஓரளவுக்கு வரதட்சணை குறைந்திருக்கிறது.இன்னும் ஒரு தலைமுறையில் வரதட்சணை மிக மிக குறையும்.

"மனைவியை தேர்ந்த்தெடுக்கும்
போது மட்டும்
மறக்காமல் ஒரு
மனிதனாக நடந்துகொள்
ஓடிப் போய்
பெற்றோரின் பின்னாலே
ஒளிந்து கொண்டால்
ஆடைகளால் மட்டுமே
நீ ஆண்மகன்"


அருமையான வரிகள்.
Title: Re: வரதட்சணை வாங்கும் வாலிபர்கள்
Post by: thamilan on December 22, 2014, 01:43:29 PM
GAB மச்சி
வரதட்சனை வாங்குவது குறையவில்லை. அதன் தன்மை தான் மாறி இருக்கிறது. முன்பெல்லாம் என்ன வேண்டும் என கேட்டு வாங்கினார்கள். இப்போது உங்கள் பிள்ளைக்கு நீங்கள் செய்வதை செய்யுங்கள். உங்கள் பிள்ளைக்கு நீங்கள் குறை வைக்கவா போகிறிர்கள் என நாகரிகமாக கேட்கிறார்கள், இது கேட்டு வாங்குவதை விட மோசமானது. அந்த பெற்றோர்கள் குறை வந்து விடுமோ என பார்த்து பார்த்து எல்லாம் செய்யும் நிலை.
 
Title: Re: வரதட்சணை வாங்கும் வாலிபர்கள்
Post by: CybeR on December 22, 2014, 01:51:02 PM
sSooper ji Sooper