FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on December 13, 2014, 10:22:26 AM
-
சமைக்காமல் சாப்பிடலாம்...!
காய்கறிகளைச் சமைக்கும் போது அதில் உள்ள ஊட்டச் சத்துக்கள் அழிந்துவிடுகின்றன. சத்துக்கள் குறையாமல், சுவையான உணவு வகைகளை எப்படி சமைப்பது? இயற்கை வேளாண் ஆர்வலரும், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் மாணவருமான சரவணன், சுவையான, சத்தான சில உணவு வகைகளைச் செய்து காட்டியுள்ளார். வேகவைக்காமல், எண்ணெய்யில் பொரிக்காமல் செய்வதுதான் இதன் ஸ்பெஷல். புதுச்சேரி உழவர் சந்தைக்குச் செல்பவர்கள், சரவணனின் உணவை சுவைத்திருக்கக்கூடும்.
அருகம்புல் சுவை நீர்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Fdoctor%2F2014%2F12%2Fnzrint%2Fimages%2Fp20.jpg&hash=0d2848e4d3f7e59b795f45f8342543239406bf60)
தேவையானவை:
அருகம்புல் அரைக் கைப்பிடி, மிளகு, சீரகப் பொடி ஒன்றரை டீஸ்பூன், வெல்லப்பாகு சுவைக்கு ஏற்ப, எலுமிச்சைச்சாறு 10 மில்லி.
செய்முறை:
அருகம்புல்லைத் துண்டு துண்டுகளாக நறுக்கி, மிக்சி அல்லது உரலில் போடவும். 50 100 மி.லி தண்ணீர் ஊற்றி மிளகு, சீரகப்பொடி சேர்த்து அரைக்கவும். (முதல் வேகத்தில்) அரைத்தவுடன் 300 மி.லி தண்ணீர் கலந்து, பிறகு வடிகட்டவும். இதனுடன் எலுமிச்சைச்சாறு கலந்து, தேவைக்கு ஏற்ப வெல்லப்பாகு கலந்து பரிமாறவும்.
பயன்கள்:
சர்க்கரை நோயாளிகள் வெறும் வயிற்றில் குடித்துவர, நோய் கட்டுக்குள் இருக்கும். ஊளைச்சதை உள்ளவர்கள் குடித்துவர, உடல் மெலியும். ரத்தசோகை, மற்றும் உடல் பலவீனமானவர்கள் தொடர்ந்து குடித்துவர, உடல் பலப்படும்.
-
பச்சைக் கடலை மிக்சர்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Fdoctor%2F2014%2F12%2Fnzrint%2Fimages%2Fp20a.jpg&hash=e344cf978b66e44758da3da8825f96dd4b5a14e0)
தேவையானவை:
வெள்ளைக் கொண்டைக் கடலை ஒரு கப், பாசிப் பயிறு அரை கப், பச்சை வேர்க்கடலை, தட்டை அவல் தலா கால் கப், மிளகு, சீரகம் தலா அரை டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை:
பயறு வகைகளை 12 மணி நேரம் நீரில் ஊறவைத்து, லேசாக முளை வந்தவுடன் ஒன்றாகக் கலந்துவிடவும். அதனுடன் அவல், தேவையான அளவு உப்பு, மிளகு, சீரகம் பொடித்துக் கலக்கவும். இப்பொழுது, பச்சைக்கடலை மிக்சர் தயார். இதைக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
பயன்கள்:
தேகம் மெலிந்தவர்கள் தொடர்ந்து சாப்பிட்டுவர, உடல் புஷ்டியாகும்.
-
வில்வ இலைச் சாறு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Fdoctor%2F2014%2F12%2Fnzrint%2Fimages%2Fp20b.jpg&hash=a80b43afb75d1737aaecdbb0341eabc01b9b2b2b)
தேவையானவை:
வில்வ இலை அரைக் கைப்பிடி, மிளகு, சீரகப் பொடி, எலுமிச்சைச்சாறு, தேன் அல்லது வெல்லப் பாகு தேவையான அளவு.
செய்முறை:
வில்வ இலையை மிக்சியில் போட்டு, அதனுடன் ஒரு டீஸ்பூன் மிளகு, சீரகப் பொடி சேர்க்கவும். 50 மி.லி தண்ணீர் விட்டு அரைக்கவும். இதில் 300 மி.லி தண்ணீர் கலந்து வடிகட்டவும். அதனுடன் எலுமிச்சைச்சாறு, சுவைக்கு ஏற்ப வெல்லப்பாகு அல்லது தேன் கலந்து பரிமாறவும்.
பயன்கள்:
உடல் சூடு தணியும். விடாத சளித் தொல்லை உள்ளவர்கள் இதனை அருந்திவர, உடல் பலம் பெற்று, ஆரோக்கியம் அடைவர். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் உகந்த பானம்.
-
சர்க்கரைவள்ளிக் கிழங்கு மாவுஉருண்டை
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Fdoctor%2F2014%2F12%2Fnzrint%2Fimages%2Fp20c.jpg&hash=6a00815ffa706bda6265f508d83dfbe87ddc1f7a)
தேவையானவை:
துருவிய சர்க்கரைவள்ளிக் கிழங்கு 200 கிராம், பொட்டுக்கடலை மாவு 100 கிராம், தினை அரிசி மாவு 100 கிராம், நாட்டுச் சர்க்கரை சுவைக்கு ஏற்ப, எலுமிச்சம் பழம் 2.
செய்முறை:
துருவிய சர்க்கரைவள்ளிக் கிழங்குடன் எலுமிச்சைச்சாறு, நாட்டுச் சர்க்கரை கலந்து, சம அளவு தினை அரிசி, பொட்டுக்கடலை மாவு சேர்த்து, லட்டுகளாகப் பிடித்துப் பரிமாறவும்.
பயன்கள்:
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். சாப்பிட்டவுடன் குளுகோஸாக மாற்றப்பட்டு உடலுக்கு சக்தியைத் தரும்.
-
பாகற்காய் ஊறுகாய்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Fdoctor%2F2014%2F12%2Fnzrint%2Fimages%2Fp21.jpg&hash=8d8b49f82bd5373edbe5a650a4ebbec89b7ec579)
தேவையானவை:
பாகற்காய் 100 கிராம், இஞ்சி துருவியது 50 கிராம், எலுமிச்சம்பழம் 2, உப்பு தேவையான அளவு.
செய்முறை:
நறுக்கிய பாகற்காய் மற்றும் துருவிய இஞ்சியுடன், எலுமிச்சைச்சாறைக் கலந்து, மிக்ஸியில் இட்டு கொரகொரப்பாக அரைக்கவும். அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்துப் பரிமாறவும்.
பயன்கள்:
சர்க்கரை நோயாளிகள் இந்த ஊறுகாயைப் பயன்படுத்தலாம்.
-
கம்புப் புட்டு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Fdoctor%2F2014%2F12%2Fnzrint%2Fimages%2Fp21a.jpg&hash=347e12978a032aae31479fd9bbe264dfd35ee6e4)
தேவையானவை:
கம்பு ஒரு கப், நாட்டுச் சர்க்கரை அரை கப், ஏலக்காய் 2, தேங்காய்த் துருவல் அரை கப், பசு நெய் தேவையான அளவு
செய்முறை:
4 மணிநேரம் ஊறவைத்த கம்பை, நீர் போக வடிகட்டி, மிக்ஸியில் அல்லது உரலில் போட்டு, அதனுடன் ஏலக்காய் சேர்த்து, மாவாக அரைத்துக்கொள்ளவும். பிறகு அரைத்த மாவுடன் தேங்காய்த்துருவல், நாட்டுச்சர்க்கரை, சிறிது நெய் கலந்து பரிமாறவும்.
பயன்கள்:
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் சிறுதானிய உணவாகும்.
-
நெல்லிக்காய் சாஸ்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Fdoctor%2F2014%2F12%2Fnzrint%2Fimages%2Fp21b.jpg&hash=9700a8d9ce60ff77f068949ddfb6793509c15a0a)
தேவையானவை:
துருவிய நெல்லிக்காய் , தேங்காய்த்துருவல் தலா 100 கிராம், முந்திரிப் பருப்பு 50 கிராம், வெல்லப்பாகு தேவையான அளவு.
செய்முறை:
துருவிய நெல்லிக்காய், தேங்காய்த்துருவல், முந்திரிப் பருப்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்கவும். சுவைக்கு ஏற்ப வெல்லப்பாகு கலந்து, சப்பாத்தி, பிரெட், ரொட்டி, சமோசா, வகைகளுடன் பரிமாறவும்.
பயன்கள்:
சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தலாம். நெல்லியில் வைட்டமின் சி உள்ளதால், கண்பார்வைக்கு நல்லது, உடல் வலுவாகும்.
-
பப்பாளிப் பழச்சாறு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Fdoctor%2F2014%2F12%2Fnzrint%2Fimages%2Fp22.jpg&hash=c44645badc63c29d0cda8ed7ec00de54109f4c4b)
தேவையானவை:
துண்டுகளாக நறுக்கிய நாட்டுரகப் பப்பாளி 200 கிராம், கொட்டை நீக்கிய பேரீச்சை 50 கிராம், வெல்லப்பாகு தேவையான அளவு.
செய்முறை:
பப்பாளித் துண்டுகளுடன் பேரீச்சையும் சேர்த்து, மிக்ஸியில் சிறிதுத் தண்ணீர் விட்டு கூழாக அரைக்கவும், பிறகு அந்தக் கூழுடன் சுவைக்கு ஏற்ப வெல்லப்பாகு மற்றும் தேவையான அளவு நீர் கலந்து பரிமாறவும்.
பயன்கள்:
பழமாகச் சாப்பிட விரும்பாதவர்களுக்கு இந்த வகைப் பழச்சாறைக் கொடுக்கலாம். அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது. உடனடியாக குளுகோஸாக மாறி, சக்தியைத் தரக்கூடியது. பேரீச்சை கலந்துள்ளதால் இரும்புச் சத்தும் உடலில் சேரும்.
-
தேங்காய்ப் பால் அவல் சாதம்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Fdoctor%2F2014%2F12%2Fnzrint%2Fimages%2Fp23.jpg&hash=dead37e11ab34946f386bc75672f7dfebe9a6edf)
தேவையானவை:
அவல் 100 கிராம், தேங்காய் ஒரு மூடி, வெல்லப்பாகு சுவைக்கு ஏற்ப, முந்திரிப் பருப்பு 20 கிராம்.
செய்முறை:
தேங்காயை மிக்ஸியில் அரைத்துப் பால் எடுத்துக்கொள்ளவும், முந்திரியை விழுதாக அரைத்து, இரண்டையும் கலந்து, அவலை நீரில் கழுவிச் சேர்க்கவும். பிறகு சுவைக்கு ஏற்ப வெல்லப்பாகு கலந்துப் பரிமாறவும்.
பயன்கள்:
சிற்றுண்டியாக விரும்பி உண்ணக்கூடிய உணவு. சர்க்கரை நோயாளிகள் இதனைத் தொடர்ந்து சாப்பிட, நோய் கட்டுக்குள் இருக்கும்.
-
முருங்கைக் கீரை சுவை நீர்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Fdoctor%2F2014%2F12%2Fnzrint%2Fimages%2Fp23a.jpg&hash=9de4f0bf8f0b2df8dd3128f8bffb4c7497906014)
தேவையானவை:
முருங்கைக் கீரை அரைக் கைப்பிடி, மிளகு சீரகப் பொடி ஒரு டீஸ்பூன், எலுமிச்சை ஒரு பழம், வெல்லப்பாகு சுவைக்கு ஏற்ப.
செய்முறை:
முருங்கைக் கீரை, மிளகு, சீரகப் பொடியை மிக்ஸியில் போட்டு 100 மில்லி தண்ணீர் விட்டு அரைக்கவும். பிறகு அதனுடன் 500 மில்லி தண்ணீர் கலந்து, வடிகட்டி எலுமிச்சைச்சாறு கலந்து, சுவைக்கு ஏற்ப வெல்லப்பாகு கலந்து பரிமாறவும்.
பயன்கள்:
முருங்கைக் கீரை தொடர்ந்து சாப்பிட ரத்தசோகை, நரம்புத் தளர்ச்சி, இரும்புச் சத்து குறைபாடு, ஆண்மைக் குறைபாடு நீங்கி, உடல் ஆரோக்கியம் பெறும்.