FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on December 12, 2014, 01:48:14 PM
-
பிராணயாமம் செய்ய தொடங்கும் முன் கவனிக்க வேண்டியது
பிராணன், உயிர் ஆற்றல் எனப்படும். இதை ஒழுங்குபடுத்துவதே பிராணயாமம். பிராணயாமம் என்பது வெறும் சுவாசம் அல்ல. சுவாச முறை (மூச்சை உள்ளிழுத்தல், வெளிவிடுதல், நிறுத்திக் கொள்ளுதல்) உயிராற்றலை தன்னிடத்து கொண்டிருக்கவில்லை.
பிராணயாமம் சுவாசத்தை ஒழுங்குபடுத்துகிறது. அத்துடன் புலன்களையும், மனத்தையும் செம்மைப்படுத்துகிறது. பிராணயாமத்தினால் நாம் உடலை ஆரோக்கியமானதாகவும், வலுவுள்ளதாகவும் ஆக்கிக் கொள்ளலாம். பிராணயாமத்தினால் உடலில் தேங்கிக்கிடக்கும் அதிகப்படியான கொழுப்பு கரைக்கப்படுகிறது. பிராணயாமத்தில் ஈடுபடுபவர்கள் சளி, இருமல் போன்ற நோய்களிலிருந்து விடுபடுவார்கள்.
பிராணயாமத்தை தொடர்ந்து செய்து வருபவர்களின் முகத்தில் நல்ல தேஜஸ் தோன்றும். பிராணயாமப் பயிற்சினால், நுரையீரல் முழுவதும் போதிய பிராணவாயுவை பெறுகிறது. அதற்கு கிடைக்கும் ரத்த்தின் அளவும், தரமும் அதிகமாகிறது. உடலின் எல்லாத்திசுக்களுக்கும், செல்களுக்கும் ஏராளமான சுத்தரத்தமும், நிணநீரும் கிடைக்கின்றன.
உயிர்களின் வளர்ச்சியை பிராணயாமம் துரிதப்படுத்துகிறது. பிராணயாமப் பயிற்சிகளை செய்வதற்கு குறிப்பிட்ட யோக ஆசன நிலைகள் சிறந்தவை. எல்லா பிராணயாமப் பயிற்சிகளையும் ஏதாவது ஒரு உட்கார்ந்திருக்கும் நிலையில் தான் பயிற்சி செய்ய வேண்டும்.
அப்போது முதுகு, கழுத்து, தலை ஆகியவை நேராக இருக்க வேண்டும். பிராணயாமம் செய்யும் முன் உடலையும், உள்ளத்தையும் அமைதியாக வைத்திருக்க உதவும் சவாசனத்தை செய்து பிறகே பிராணயாமத்தை தொடங்க வேண்டும்.
யோகசானங்கள் செய்வதற்கு பலவித கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும். ஆனாலும் சவாசனம் என்ற சாந்தி ஆசனத்தை யார் வேண்டுமானாலும் செய்யலாம். இதற்கு எந்த கட்டுப்பாடுகளுகளும் இல்லை. குறிப்பாக நோயினால் அவதிப்படுபவர்கள் இந்த சவாசனத்தை செய்வதன் மூலம் நோயின் வலியையும், மனக்குழப்பத்தையும் தணித்துக் கொள்ளலாம். மிகச்சிறந்த ஆசனம் இது.