FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on December 10, 2014, 02:28:53 PM

Title: ~ வயிற்றின் கொழுப்பை குறைக்க உதவும் வியக்கத்தக்க வீட்டு சிகிச்சைகள்! ~
Post by: MysteRy on December 10, 2014, 02:28:53 PM
வயிற்றின் கொழுப்பை குறைக்க உதவும் வியக்கத்தக்க வீட்டு சிகிச்சைகள்!

எலுமிச்சை ஜூஸ் காலையில் எழுந்தவுடன் எலுமிச்சை பழம் ஒன்றை எடுத்து சாறு பிழிந்து அதை தண்ணீரில் கலக்கவும். கொழுப்பை எரிக்கும் நோக்கத்திற்காக, எலுமிச்சை ஜூஸை தயாரிக்கும் போது வெதுவெதுப்பான நீரை பயன்படுத்துவது நல்லதென்றாலும் கூட, அறை வெப்பநிலையில் உள்ள நீரையும் பயன்படுத்தலாம்.

இது எலுமிச்சையை அதன் வேலையை செய்ய விடாமல் தடுக்க போவதில்லை. எலுமிச்சை ஜூஸை நன்றாக கலந்து தினமும் காலை வெறும் வயிற்றில் பருக வேண்டும். தினமும் காலை இதனை பருகிய பிறகு, 30 நிமிடங்களுக்கு வரை எதையும் உண்ணவோ, பருகவோ கூடாது.

சியா விதைகள் நீங்கள் சைவ உணவை மட்டும் உண்ணக்கூடியவராக இருந்தால் மீன் இல்லாமல் எப்படி ஒமேகா-3 கொழுப்பமிலங்களைப் பெறுவது என தெரியவில்லையா? கவலை வேண்டாம், மீனில் உள்ளதை போலவே ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் அதிக அளவில் உள்ள சியா விதைகளைப் பயன்படுத்தலாம்.

இருப்பினும் இந்த விதைகளில் உள்ள ஆல்ஃபா-லினோலெனிக் அமிலத்தை DHA அல்லது EPA-வாக மாற்ற (மீன் எண்ணெயில் இது நேரடியாக கிட்டி விடும்) உங்கள் உடல் சற்று அதிகமாக பாடுபட வேண்டும். ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் போக, சியா விதைகளில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள், கால்சியம், இரும்பு மற்றும் டையட்டரி நார்ச்சத்தும் அதிகமாக உள்ளது.

இவைகள் உங்கள் வயிற்றை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும். 4-8 டீஸ்பூன் (30-60 கிராம்) சியா விதைகளை பகல் நேரத்தில் உட்கொண்டால், அதிகமாக பசி எடுக்காமல் இருக்கும் என ‘தி ஆஸ்டெக் டையட்’ என்ற புத்தகம் பரிந்துரைக்கிறது. இதனால் அதிகமாக உண்ணாமல் இருக்கலாம். இருப்பினும் 1 டீஸ்பூன் சியா விதைகளை உங்கள் உணவுடன் சேர்த்துக் கொண்டாலே போதுமானது தான்.

இஞ்சி டீ இஞ்சி என்பது இயற்கையாகவே செரிமானத்திற்கு உதவி செய்யும் பொருள் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் இஞ்சி என்பது வெப்ப ஆக்கம் என்பது உங்களுக்கு தெரியுமா? வெப்ப ஆக்கம் ஏஜென்ட்கள் உங்கள் உடலின் வெப்பநிலையை அதிகரித்து கொழுப்பை சிறந்த முறையில் எரிக்க உதவிடும்.

அதிகமாக உண்ணுதல், வயது சம்பந்தப்பட்ட ஹார்மோன் குறைபாடு, உடற்பயிற்சி செய்யாதது மற்றும் மன அழுத்தம் போன்ற சில பிரச்சனைகளால் தான் வயிற்றில் கொழுப்பு தேங்குகிறது. இந்த பிரச்சனைகள் அனைத்தையும் இஞ்சி நீக்கும். கார்டிசோல் உற்பத்தியை தடுத்து நிறுத்தவும் இஞ்சி பயன்படுகிறது.

கார்டிசோல் என்பது ஆற்றல் திறனை சீராக்கவும் அணிதிரட்டவும் தேவைப்படும் ஒரு ஸ்டெராய்டு ஹார்மோனாகும். அதனால் வயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்கும் உங்கள் முயற்சிக்கு இஞ்சி டீயை பருகுங்கள்.

பூண்டு சுருக்கியக்க (சிஸ்டாலிக்) மற்றும் இதய விரிவு (டையஸ்டாலிக்) இரத்த கொதிப்பை குறைக்கவும், ட்ரைகிளிசரைடுகளை குறைக்கவும், நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கவும் பூண்டு உதவுவதால், அது நம் இதயகுழலிய அமைப்பிற்கு நல்லது என நமக்கு தெரிந்திருக்கும்.

இதனோடு சேர்த்து, பூண்டில் உடல் பருமன் எதிர்ப்பி குணங்களும் அடங்கியுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? அதனால் பூண்டை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லதாகும். இருப்பினும் வயிற்றில் உள்ள கொழுப்பை நீக்க பூண்டை பச்சையாக பயன்படுத்துவது தான் அதிக பயனை தரும்.

மூலிகைகள் மூலிகைகள் என்று தெரியாமலேயே உங்கள் சமையலறையில் பல மூலிகைகள் இருக்கும். அதனை உங்கள் தினசரி சமையலில் அல்லது சாலட் தயாரிப்பு போன்றவற்றில் பயன்படுத்தி தான் வருகிறோம். ஆனால் நம் உடலின் கொழுப்பின் மீது அது தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதும் நமக்கு தெரிவதில்லை.

இஞ்சி, புதினா மற்றும் வெள்ளரிக்காய் போன்றவைகள் எல்லாம் அதற்கு சில உதாரணங்கள் ஆகும். இந்த மூலிகைகளை கொழுப்பை எரிக்க உதவும் எலுமிச்சையுடன் சேர்த்து உட்கொண்டால், அது உங்கள் வயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்கும் மாயத்தை நிகழ்த்தும்.

அதற்கு தண்ணீருடன் சிறிது வெள்ளரிக்காய், இஞ்சி, எலுமிச்சை சாறு மற்றும் புதினா இலைகள் சேர்த்து இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனைப் பருக வேண்டும்.

வாழ்க்கை முறை மாற்றங்கள் சில நேரங்களில் வயிற்றின் கொழுப்பை நீக்குவதற்கு நீங்கள் போதிய உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, இயற்கை சிகிச்சைகளை கையாளுவீர்கள். ஆனாலும் உங்களால் கொழுப்பை குறைக்க முடிவதில்லை. அப்படியானால் உங்களின் வாழ்க்கை முறையை நீங்கள் ஆராய்ந்து, அதில் சில மாற்றங்களை நீங்கள் செய்தாக வேண்டும்.

இந்த மாற்றங்கள் சிறியது தான் என்றாலும் கூட, அதனை ஒரு பழக்கமாக நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். உங்கள் வயிற்றின் கொழுப்பை நீங்கள் உண்மையிலேயே நீக்க வேண்டுமானால், இப்போதிலிருந்தே இந்த மாற்றங்களை கொண்டு வாருங்கள்.

போதிய தூக்கம் வயிற்றில் கொழுப்பு தேங்குவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக விளங்குவது தூக்கமின்மை. நீங்கள் தூங்காமல் இருக்கும் போது, இனிப்பு மற்றும் கொழுப்பு உணவுகளை உட்கொள்ள நீங்கள் தூண்டப்படுவீர்கள். உங்கள் கார்டிசோல் ஹார்மோனையும் இது அதிகரிக்கச் செய்யும்.

இதனால் இன்சுலினுக்கு நீங்கள் உணர்சியற்றவராக மாறி விடுவீர்கள். இதன் காரணமாக உங்கள் உடலின் பயோ-ரிதமை நீங்கள் இழப்பீர்கள். அதனால் நன்றாக தூங்குங்கள்.