FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on December 09, 2014, 08:22:38 PM
-
அகன்ற உலகு நான் என்றது
அகல்
அழகிய உடல் நான் என்றது
திரி
அசையும் உயிர் நான் என்றது
சுடர்
உழைத்து வடிந்த உதிரத் துளிகளாய்
தேங்கி நின்ற
எண்ணெய்
வாய் திறக்கவில்லை
குறைகுடங்கள் தான்
தளும்பும்
நிறைகுடங்கள் என்றும்
தழும்புவதில்லை
-
அழகான
அற்புதமான
ஆழமான
படைப்பு தோழரே...
சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.
அருமை அருமை...முடித்த விதம் அருமை.
தேவை விளம்பரம்
பூக்கடைக்கும்
காகிதப்பூக்கள் !