FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on December 08, 2014, 08:52:43 PM

Title: ~ மூக்கின் மேல் சொரசொரப்பை நீக்க வழிகள்! ~
Post by: MysteRy on December 08, 2014, 08:52:43 PM
மூக்கின் மேல் சொரசொரப்பை நீக்க வழிகள்!

ஆண்கள், பெண்கள் என அனைவருக்குமே பட்டுப்போன்ற மென்மையான சருமம் வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கு இடையூறை விளைவிக்கும் வண்ணம் பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவை முகத்தில் ஏற்பட்டுவிடும்.

ஒருவேளை பருக்கள் முகத்தில் இல்லாமல் இருந்தாலும், மூக்கின் மேல் மற்றும் அதனைச் சுற்றிய இடங்கள் மட்டும் சொரசொரவென்று லேசாக கருப்பாகவும், வெள்ளையாகவும் இருக்கும்.

பருக்களையும், பருக்களால் வந்த தழும்புகளையும் நீக்க 20 வீட்டுக்குறிப்புகள்!

கரும்புள்ளி பிரச்சனையானது எண்ணெய் பசை சருமத்தினருக்கு தான் அதிகம் இருக்கும். அதிலும் சருமத்துளைகளில் இருந்து வெளிவரும் எண்ணெயானது வெளியேறாமல் அடைக்கப்படும் போது ஏற்படும்.

சருமத்தின் மென்மையைத் தடுக்கும் கரும்புள்ளி பிரச்சனையை தடுக்க சமையலறையிலேயே நிறைய பொருட்கள் உள்ளன.

இங்கு கரும்புள்ளியை நீக்க உதவும் சமையலறைப் பொருட்கள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அதனை அன்றாடம் செய்து உங்கள் முகத்தை பட்டுப்போன்று மென்மையாக வைத்துக் கொள்ளுங்கள்.

தேன் தேன் கூட கரும்புள்ளிகளைப் போக்க உதவும். அதற்கு தேனை லேசாக சூடேற்றி, அதில் சிறிது சர்க்கரை சேர்த்து, பின் அதனை மூக்கின் மேல் தடவி லேசாக மசாஜ் செய்து, முகத்தை கழுவினால், கரும்புள்ளிகள் நீங்கும்.

தக்காளி தக்காளியை அரைத்து, அதனை முகத்தில் தடவி ஊற வைத்து, பின் கழுவி துணியால் துடைத்தால், முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்குவதோடு, கரும்புள்ளிகளும் போய்விடும்.

ஆவிப்பிடிப்பது அனைத்தையும் விட ஆவிப்பிடிப்பது தான் மிகவும் சிறப்பான வழி. அதிலும் சுடுநீரில் மூலிகைகளான லாவெண்டர், எலுமிச்சை தோல் மற்றும் புதினா இலைகள் ஆகியவற்றை சேர்த்து, ஆவிப்பிடித்து சுத்தமான துணியால் முகத்தை துடைத்தால், முகம் புத்துணர்ச்சியாக இருப்பதுடன், கரும்புள்ளிகளும் விரைவில் மறையும்.

பால் தினமும் 2-3 முறை பாலை பஞ்சில் நனைத்து, முகத்தை துடைத்து எடுத்தால், முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கி, முகம் பொலிவோடும் மென்மையாகவும் இருக்கும்.

கற்றாழை கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் கற்றாழை துண்டு கொண்டு மேல்புறம் நோக்கி தேய்த்தால், கரும்புள்ளிகள் நீங்கும்.

எலுமிச்சை சருமத்துளைகளின் அடைப்பால் ஏற்படும் கரும்புள்ளியை, எலுமிச்சை கொண்டு போக்கலாம். அதற்க எலுமிச்சையை மூக்கின் மேல் தேய்த்தால், சருமத்துளைகளானது திறந்து, கரும்புள்ளிகள் வருவது தடுக்கப்படும்.

கடலை மாவு கடவை மாவில் சிறிது பாதாம் பொடி சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை முகத்தில் தடவி ஊர வைத்து, கழுவும் போது தேய்த்துக் கொண்டே கழுவினால், கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.

தயிர் 2 டேபிள் ஸ்பூன் தயிரில், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி ஊற வைத்து தேய்த்து கழுவினாலும், கரும்புள்ளிகள் நீங்கும்.

கருப்பு காராமணி கருப்பு நிற காராமணியை பொடி செய்து, பின் அதில் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, மூக்கின் மேல் தடவி ஊற வைத்து தேய்த்து கழுவ வேண்டும். இதனாலும் கரும்புள்ளிகளைப் போக்கலாம்.