FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on December 07, 2014, 01:53:20 PM

Title: ~ வெஜிடபிள் பிரியாணி:- ~
Post by: MysteRy on December 07, 2014, 01:53:20 PM
வெஜிடபிள் பிரியாணி:-

(https://scontent-b-sjc.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/10173551_352592991588960_3081239979692960974_n.jpg?oh=62d44e919abf0b57d1b0fc1955196e40&oe=550EFB29)

தேவையான பொருட்கள்:-

பாஸ்மதி அரிசி – 2 கப்
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 3
கேரட் – 1
பட்டாணி – கையளவு
உருளைக்கிழங்கு – 1
புதினா, மல்லி இலை – கையளவு
மஞ்சள்தூள் – 1 /4 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தயிர் – 1 /2 கப்

அரைக்க:-

சின்ன வெங்காயம் – 10
பூண்டு – 6 பெரிய பல்
இஞ்சி – ஒரு துண்டு
வர மிளகாய் – 3
தனியா – 2 தேக்கரண்டி
சீரகம் – 1 /2 தேக்கரண்டி
பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா 2
கசகசா – 1 தேக்கரண்டி

தாளிக்க:-

பிரியாணி இலை – 2
பச்சை மிளகாய் – 2
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
நெய் – 2 மேசைக்கரண்டி

செய்முறை:-

1) அரிசியை கழுவி 1 /2 மணி நேரம் ஊற வைக்கவும்.

2) அரைக்க கொடுத்துள்ள பொருட்களை தண்ணீர் ஊற்றாமல் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

3) வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

4) தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

5) கேரட்டை 1 இன்ச் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

6) உருளைகிழங்கை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

7) குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி சூடு செய்யவும். பிரியாணி இலை, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

8)பின் பச்சை மிளகாய், அரைத்த மசாலா சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

9) பின் வெட்டி வைத்துள்ள காய்கறிகள், மஞ்சள்தூள், உப்பு, புதினா, மல்லி இலை, தயிர் சேர்த்து வதக்கவும்.

10) இறுதியாக ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து, 2 1 /2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து மூடி போட்டு வேக வைக்கவும்.

11) ஒரு விசில் வந்த பிறகு, அடுப்பை குறைந்த சூட்டில் 5 நிமிடம் வைத்து வேக விட்டு எடுக்கவும்..