FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: ஸ்ருதி on December 16, 2011, 05:17:41 PM
-
தேவையான பொருட்கள்:
காலிபிளவர் - சிறிய பூ - 1.
பெரிய வெங்காயம் - 1.
மிளகாய்தூள் - அரை ஸ்பூன்.
கரம் மசாலாத்தூள் - கால் ஸ்பூன்.
நறுக்கிய மல்லித்தழை - 2 ஸ்பூன்.
எண்ணெய் - 2 ஸ்பூன்.
சர்க்கரை - அரை ஸ்பூன்.
சீரகம் - கால் ஸ்பூன்.
இஞ்சி பூண்டு விழுது - அரை ஸ்பூன்.
உப்பு - 1 ஸ்பூன்.
மாவு பிசைவதற்கு:
கோதுமை மாவு - 1 டம்ளர்.
சோயா மாவு - அரை டம்ளர்.
வெண்ணை - 50 கிராம்.
உப்புத்தூள் - 1 ஸ்பூன்.
செய்முறை:
முதலில் மாவுகளை சலித்து வெண்ணையையும், உப்பையும் சேர்த்து, சிறிது பாலையும் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து மூடி வைக்க வேண்டும்.
காலிபிளவரை துருவி வைக்க வேண்டும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும்.
வானலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகத்தை வெடிக்கவிட்டு வெங்காயத்தை போட்டு நன்கு வதக்க வேண்டும்.
பிறகு காலிபிளவரை சேர்த்து வதக்கி, மிளகாய்தூள், கரம் மசாலாத்தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி இறக்க வேண்டும்.
பின்பு சர்க்கரையை சேர்த்து சிறுசிறு உருண்டைகளாக்க வேண்டும்.
மாவை சப்பாத்தி இடும் அளவில் உருண்டைகள் செய்து வட்டமாக இட்டு, மசாலா உருண்டைகளாக வைத்து, ஸ்டப்டு செய்து வட்டமாக இட்டு சுட்டு எடுக்க வேண்டும்.
மாலை டிபனுக்கு மயக்கும் சுவை கொண்ட இதனை செய்தால் சாப்பிடும் மனிதர் மகிழ்வர்!
-
::) ennadi ithu