FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on December 06, 2014, 08:56:42 AM
-
தான் நினைத்த பிரதிமை
உருவாகும் வரை
தகிக்கும் உலை அருகில்
தவம் போல
காத்திருக்கிறான் கொல்லன்
நம்மை நாமே
மாற்றத்தான்
வாழ்வெனும் உலையில்
நம்மை தள்ளி
வாசலில் காத்திருக்கிறான்
இறைவன்
இதை உணர்ந்து
துயரங்களை சகித்தால்
நம்மை வாரியணைத்துக் கொள்வான்
இறைவன்
-
gurujieeee konjo konjo me ku purile yea :(