FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: ஸ்ருதி on December 16, 2011, 08:22:51 AM

Title: எப்படி தூங்கறீங்க? நீங்க தூங்கும் முறை சரிதானா? அடிக்கடி புரண்டு படுக்கிறீர்களா?
Post by: ஸ்ருதி on December 16, 2011, 08:22:51 AM
எப்படி தூங்கறீங்க? நீங்க தூங்கும் முறை சரிதானா? அடிக்கடி புரண்டு படுக்கிறீர்களா?
சரியான நேரத்தில் தூங்க முடியவில்லையா? அப்படியானால், முதலில் கவனியுங்கள்


அமெரிக்கன் அகடமி ஆப் ஸ்லீப் ரிசர்ச் அமைப்பு சில "டிப்ஸ்"களை தந்துள்ளது, இதோ:


* சிலர், படுக்கையில் படுத்தவுடன் தூங்கி விடுவர், சிலருக்கு தூக்கம் வராது. புரண்டு
படுத்தபடி தவியாய் தவிப்பர். அதனால், தூக்கம் வந்தவுடன் படுக்கைக்கு போங்க.


* அதற்காக "டிவி" பார்ப்பதோ, கத்தலான பாடல் கேட்பதோ வேண்டாம். மிதமான இசை கேட்கலாம்.
புத்தகம் படிக்கலாம். தூக்கம் வந்தவுடன் படுக்கைக்கு போகலாம்.


* படுக்கப்போகும் முன், வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்கலாம், பத்து நிமிடம் வரை
புத்தகம் படிக்கலாம். இவற்றை வழக்கப்படுத்திக் கொள்ளலாம்.


* கிளுகிளு, அட்வென்ச்சர் புத்தகங்களை படிக்க வேண்டாம். படித்தால், அட்சுனலின் சுரப்பி எகிறிப்போய், அது தூக்கத்தை கெடுக்கும்.


* தூங்குவதற்கு முன் வாக்கிங், உடற்பயிற்சி கூடாது. குறைந்தபட்சம் ஆறு மணி நேரத்துக்கு முன்பு தான் நல்லது.


* இரவில் காபி , டீ , சாக்லெட் , கோலா சம்பந்தப்பட்டவை எதுவும் கூடாது.


* படுக்கப்போகும் முன், சிகரெட் குடிக்கக்கூடாது. அதுபோல மதுவும் கூடாது. அதற்கும் சில மணி நேரத்துக்கு முன்பேமுடித்துவிட வேண்டும்.


* குறிப்பிட்ட நேரத்திற்கே படுக்கப்போங்கள். பகல் நேர "குட்டித்" தூக்கம் மிக நல்லது.

Title: Re: எப்படி தூங்கறீங்க? நீங்க தூங்கும் முறை சரிதானா? அடிக்கடி புரண்டு படுக்கிறீர்களா?
Post by: RemO on December 16, 2011, 10:32:37 AM
thookam vantha padukaiku pokalanu wait panina night fulla wait pananum pola irukuu enaku
nala pathivu shur
Title: Re: எப்படி தூங்கறீங்க? நீங்க தூங்கும் முறை சரிதானா? அடிக்கடி புரண்டு படுக்கிறீர்களா?
Post by: Global Angel on December 16, 2011, 08:26:46 PM
நல்ல பதிவு சுருதி ... பகல் தூங்கினா மூளை வளர்ச்சி அறிவுத்திறன் வளருமாம்