FTC Forum
தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on December 02, 2014, 08:34:55 PM
-
வீட்டு பராமரிப்பு டிப்ஸ்
வீட்டில் எங்கு பார்த்தாலும் எறும்பு மொய்த்தால், ஒரு பக்கெட் நீரில் சிறிது மண்ணெண்ணெய் ஊற்றி வீட்டைத் துடைத்தால் எறும்பு மட்டுமல்லாமல் சிறுசிறு கிருமிகளும் ஒழியும்.
வீட்டினுள் வைத்துள்ள அலங்கார பிளாஸ்டிக் அல்லது பூச்செண்டுகளை எவ்வளவு துடைத்தாலும் பளிச்சென ஆகாது. அதற்கு ஹேர் டிரையரை கொண்டு க்ளீன் செய்தால் நொடியில் பளிச் பளிச்தான்.
வொயிட் வினிகரை சிறிதளவு நீரில் கலந்து, பாத்ரூம் டைல்ஸில் தெளித்து பிளாஸ்டிக் நாரிலான பிரஷ்ஷில் தேய்த்தால், டைல்ஸில் படிந்துள்ள கறை காணாமல் போய்விடும்.
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Faval%2F2014%2F12%2Fnzrint%2Fimages%2Fp74.jpg&hash=db87d65402dc16f960ce7ed85d17f26c7adafe9b)
சோப்புக் கரைசலில், சிறிது சோடா மாவை கலந்து, அதில் கரித்துணிகளை ஒரு மணி நேரம் ஊறவைத்து துவைத்தால் எண்ணெய் பிசுக்கும் போகும், துணிகளும் பளிச்சென ஆகும்.
வீட்டில் பாத்திரம் கழுவும் சின்க் அடைத்துக்கொண்டால், சோடா மாவு மற்றும் வினிகர் கலந்து ஊற்றி ஒரு மணி நேரம் கழித்து சுடுநீர் ஊற்றி விடுங்கள். அடைப்பு ஓடிவிடும்.
வாஷ் பேஸினை கழுவும் முன்னர். அதை அடைத்துவிட்டு பேஸின் முழுக்க வெந்நீர் ஊற்றி அரை மணி நேரம் தேங்கவிடுங்கள். பிறகு அடைப்பை நீக்கி தண்ணீர் வெளியேறியதும் பிரஷ்ஷால் தேய்த்துக் கழுவினால் நாள்பட்ட அழுக்கும் நீங்கிவிடும்.
வொயிட் வினிகரை வெந்நீரில் கலந்து, வீட்டைத் துடைத்தால், தரையில் உள்ள கிருமிகள் அழிவதுடன் தரையும் பளபளவென பொலிவுடன் காட்சிதரும்.