FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: ஸ்ருதி on December 16, 2011, 07:41:00 AM

Title: பப்பாளியும்... பளபளப்பும்!
Post by: ஸ்ருதி on December 16, 2011, 07:41:00 AM
கோடை காலம் தொடங்கி விட்டதால் இனி சருமத்தில் சின்ன சின்ன பிரச்சினைகள் தலைதூக்கும். குறிப்பாக தோலில் பிரச்சினை உள்ளவர்களுக்கு சோரியாசிஸ், செதில் உதிர்தல் போன்ற சிக்கல்களும் அதிகமாகும். இவர்களுக்கு பப்பாளிப் பழம் மிகவும் நல்லது.

நன்கு பழுத்த பப்பாளிப் பழத்தை சீவி அரைத்து, உடல் முழுவதும் தடவிக் கொள்ளவும். 15 நிமிடம் கழித்து பாசிப்பயறு மாவு போட்டு உடம்பை தேய்த்துக் குளிக்கவும். தினமும் பப்பாளிப் பழம் சாப்பிடவும். வாழைப் பழத் தோலையும் இது போலத் தேய்த்துக் குளித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தினமும் பப்பாளி சாப்பிட்டால் சருமத்தில் பளபளப்பை உண்டாக்கும்.
Title: Re: பப்பாளியும்... பளபளப்பும்!
Post by: RemO on December 16, 2011, 10:37:26 AM
nala thagaval shur