FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yousuf on December 15, 2011, 11:35:53 PM
-
படித்ததில் பிடித்தது!
சனநாயக நாட்டில்
சனங்களுக்கேது மதிப்பு!
பணநாயகப் பிடியில்
சிக்குண்டல்லவா கிடக்கு!
ஆள்வோரின் கையில்
அதிகாரம் ஏந்தி!
அடைத்து வைக்கப்பட்டுள்ளதோ
சனநாயக சாந்தி!
அரசைக்கூட தேர்ந்தெடுக்கும் அதிகாரம் அத்தனைபேருக்குமுண்டு-ஆனால்
தேர்ந்தெடுக்கபட்டவன் தினம் கோடியாள
தேர்ந்தெடுத்தவன் நிலையோ!
தெருக்கோடியில் வாட!
எவ்வளங்களில்லை என்றெண்ணுமளவிற்க்கு
எல்லாமும் உண்டு சனநாயக நாட்டில்
என்ன இருந்தும் என்ன பயன்!
எத்தனையோ மக்கள் இன்னும் இருப்பதோ
எந்நாளும் வறுமைக்கோட்டின் கீழ்!
உண்மைகளை உறங்க வைத்து
பொய்மைகளை ஆட்டுவிக்கும் ராஜதந்திரம்
உரிமைகள் பலயிருந்தும்
அதனை பறித்தும், பறிகொடுத்தும்
அடிமையாக்கப்படுதே தினம் தினம்!
சட்டப்படி எல்லோரும் சரிசமம்தான்
சாதிப்படி பார்த்தால் சரிந்த நிலைதான்!
சத்தியவான்களென மார்த்தட்டிக்கொண்டும்
சண்டை பலமூட்டி வேடிக்கைகள் காணும்
இதனை புரிந்தும் புரியாத சனங்கள் -பாவம்
இவர்களுக்காக தீக்கூட குளிக்கும் !
மனசாட்சியற்றோர் அரசாட்சியாண்டால்
மாசற்ற பூமி அமையுமா சாமி!
மனசாட்சி விற்று மன்னராக ஆனால்
மக்கள் நிலையெல்லாம் என்னாகும் யோசி!
சனநாயகம் சரியாக அமைய –முதலில்
சனங்களெல்லாம் தெளிவாக வேண்டும்!
மதியிருந்தும் மக்கள்
மதியிழப்பதை விடுத்து
மதியுடையோராக இருந்தால்
மண்ணும்கூட பொன்னாக மாறும்
சாய்ந்துவிடாத சட்டங்களும் தோன்றி
சனநாயகம் வீழாதே எந்நாளும்...
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்..
-
மதியிருந்தும் மக்கள்
மதியிழப்பதை விடுத்து
மதியுடையோராக இருந்தால்
மண்ணும்கூட பொன்னாக மாறும்
சாய்ந்துவிடாத சட்டங்களும் தோன்றி
சனநாயகம் வீழாதே எந்நாளும்...
Nijamana varigal
pagirvukku Nandrigal Usf
-
// மனசாட்சியற்றோர் அரசாட்சியாண்டால்
மாசற்ற பூமி அமையுமா சாமி!
மனசாட்சி விற்று மன்னராக ஆனால்
மக்கள் நிலையெல்லாம் என்னாகும் யோசி!
சனநாயகம் சரியாக அமைய –முதலில்
சனங்களெல்லாம் தெளிவாக வேண்டும்!//
unmai than mams
-
நன்றி ஸ்ருதி & ரெமோ!