FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: Little Heart on November 29, 2014, 12:44:41 PM

Title: புவியின் சுழற்சி வேகம் குறைந்துகொண்டே போகின்றது
Post by: Little Heart on November 29, 2014, 12:44:41 PM
ஒரு நாள் என்றால் என்ன? நமது புவி தன்னைத் தானே ஒரு முறை சுற்றி வருவதை நாம் ஒரு நாள் என்று கூறுகின்றோம். ஒரு முறை சுற்றுவதற்கு 23 மணி 56 நிமிடங்கள் 4 வினாடிகள் எடுக்கின்றது. ஆனால், உங்களுக்கு ஒன்று தெரியுமா நண்பர்களே? பகல் பொழுதுகள் சிறிது சிறிதாக நீண்டு கொண்டே இருக்கிறது. உலகம் தோன்றிய பொழுது ஒரு நாள் எவ்வளவு மணி நேரம் கொண்டது என்பதை உங்களால் யூகிக்க முடியுமா?  இரவும் பகலும் சேர்ந்து வெறும் 6 மணி நேரம் மட்டுமே தான்! 400 மில்லியன் வருடங்களுக்கு முன் ஒரு நாள் 21 மணி நேரம் கொண்டதாக இருந்திருக்கிறது. அப்படி என்றால் அந்நேரம், ஒரு வருடம் 410 நாட்கள் கொண்டிருந்தது. 100 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த டைனசோர்களுக்கு ஒவ்வொரு நாளும் 23 மணி நேரங்கள் நீடித்தது.

சுமார் 530 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் பூமி இப்பொழுது சுழல்வதை விட வேகமாக சுழன்று கொண்டு இருந்தது. அப்பொழுதும் வருடத்தின் நாட்கள் இப்பொழுது போலவே இருந்தது. ஆனால் பகல் பொழுதுகள் அதிகமாக இருந்தது. பல நம்பத்தகுந்த ஆதாரங்களின் படி பூமியின் சுழற்சி வேகம் குறைந்து கொண்டே வருகிறது. ஆனால், கவலைப் படாதீர்கள், நமது பூமி ஒரு போதும் முற்றிலும் சுழல்வதை நிறுத்திவிடாது. அதற்கு முதல் நமது சூரியன் நமது உலகை அழித்துவிடும்.