FTC Forum
தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: Little Heart on November 29, 2014, 12:42:13 PM
-
பகல் பொழுதில் நீல நிறத்தில் தெரியும் வானம், காலை மற்றும் மாலை நேரத்தில் மட்டும் ஏன் வேறு நிறத்தில் தெரிய வேண்டும் என்று பலமுறை நினைத்ததுண்டு, அதற்குப் பலர் வித்தியாசமான காரணங்கள் பலவற்றைக் கூறினாலும், சரியான, அறிவியல் பூர்வமான காரணத்தை இந்த அறிவு டோஸில் உங்களுக்கு அறியத் தருகிறேன்.
வானம் நீல நிறமாகத் தெரிவதற்கு ஒளிச்சிதறல் என்ற விளைவே காரணம். சூரிய ஒளி காற்று மண்டலத்திலுள்ள வாயுக்கள் மற்றும் துகள்களின் வழியே செல்வதால் அனைத்து இடங்களிலும் பரவுகிறது. சூரிய ஒளியில் பல வண்ணங்கள் இருப்பது நமக்கு ஏற்கனவே தெரிந்த விடயம், இந்த வண்ணங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமான அலைநீளம் கொண்டவை. அதனால் சூரிய ஒளி பரவும் போது குறைந்த அலைநீளம் கொண்ட நீல நிறம் விரைவாக பரவுகிறது. இதனால் தான் பகல் நேரத்தில் வானம் நீலநிறத்தில் தோன்றுகிறது.
சரி அது இருக்கட்டும், ஆனால் காலை மற்றும் மாலையில் மட்டும் ஏன் வானம் வேறு நிறத்தில் தோன்றுகிறது? அதற்கும் இந்த விளைவு தான் காரணம். காலை மற்றும் மாலை நேரங்களில் சூரிய ஒளி பரவ அல்லது மறைய ஆரம்பிக்கும் நேரத்தில் அதிக அலைநீளம் கொண்ட பிற நிறங்கள் (சிவப்பு, ஆரஞ்சு அல்லது மஞ்சள்) அதிகளவில் ஒளிச்சிதறல் அடைந்து நம் கண்களுக்குத் தெரிகின்றன.
என்ன நண்பர்களே, இப்பொழுது சந்தேகம் தீர்ந்துவிட்டதா?