FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on November 28, 2014, 07:20:17 PM
-
பூரி கிழங்கு மசாலா:-
(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/10653870_546251005506239_8528857412500024874_n.jpg?oh=dd12bebaa107467467df4ed22c31ffca&oe=5508B8AA&__gda__=1427843446_abb239c09d55884d8a7ae15300745ff9)
தேவையான பொருட்கள்:-
உருளைக்கிழங்கு – 3
பெரிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 4
இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி
கடுகு – 1 /2 தேக்கரண்டி
கருவேப்பிலை – சிறிது
உப்பு
செய்முறை:-
1) உருளைக்கிழங்கு தோலை சீவி விட்டு, 3 அல்லது 4 துண்டுகளாக நறுக்கி குக்கரில் போட்டு 3 விசில்கள் வரை வேக விடவும்.
2) வேக வைத்த உருளைகிழங்கை லேசாக மசித்துக் கொள்ளவும்.
3) வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
4)கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளிக்கவும். கடுகு வெடித்ததும் கருவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
5) பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
6) பின் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு,மஞ்சள்தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து மூடி போட்டு இரண்டு நிமிடங்கள் வேக வைக்கவும்.
குறிப்பு:-
அதிக மசால் வேண்டும் எனில் கடலை மாவை தண்ணீரில் கரைத்து மசாலில் ஊற்றி கொதிக்க விடவும் அல்லது பொட்டுக்கடலையை அரைத்து, மசாலில் ஊற்றி கொதிக்க விடவும்.