FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: Little Heart on November 28, 2014, 04:55:10 PM

Title: நிலாவில் தோட்டம் அமைக்கும் திட்டம்
Post by: Little Heart on November 28, 2014, 04:55:10 PM
பல அறிவியல் சார்ந்த கற்பனைத் திரைப்படங்களில் விண்வெளிப் பயணங்களைப் பற்றியும், அங்கு வசிப்பது பற்றியும் பார்த்திருப்போம். ஆனால் அது நனவாகும் காலம் வந்துவிட்டது. இதன் வரிசையில் மனிதன் நிலவில் இறங்கினான், செவ்வாய் கிரகத்தில் ரோவர்ஸ் மூலம் சுற்றிப்பார்த்தான். தற்போது எல்லாவற்றிற்கும் ஒருபடி மேலாக, நமது நிலவில் வசிப்பதற்கு ஒரு சில ஆண்டுகளே இருக்கும் நிலைக்கு வந்துவிட்டது. கேட்க ஆச்சரியமாகத் தான் இருக்கும், ஆனால் இது உண்மை தான் நண்பர்களே!

‘அரபிடோப்சிஸ்’ ஒரு சிறிய பூ வகைத் தாவரம் (கடுகு அல்லது முட்டைக்கோஸ் போன்றது) ஆகும். இது தான் நாம் புதிதாக குடியேறப்போகும் நிலவின் முதல் தாவரமாக இருக்கப்போகிறது. சுற்றுச்சூழல் மற்றும் இதர ஆராய்ச்சிகளின் அடிப்படையில், இந்தத் தாவரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. நாசாவின் கவனம் முழுவதும் தற்போது இந்தத் தாவரத்தின் மேல்தான் உள்ளது. இதன் மூலம் செவ்வாய் மற்றும் நிலாவில் தோட்டங்களை அமைக்க முடியும் என நாசா நம்பிக்கைத் தெரிவித்துள்ளது. 2015 முதல் நிலவில் தோட்டம் அமைக்கும் பணிகளை நாசா தொடங்கவுள்ளது. செவ்வாய் கிரகத்தில் 2021 முதல் இதே வேலைகளை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.