FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: Little Heart on November 28, 2014, 04:54:34 PM

Title: மனிதனின் மூளை நோய்களைக் குணப்படுத்தும் Blue Brain
Post by: Little Heart on November 28, 2014, 04:54:34 PM
ஒரு நரம்பியல் வல்லுநர் ஆகிய ஹென்றி மார்க்ராம் என்பவர் மூளையினைப் பற்றிய ஒரு புதிய ஆராய்ச்சியில் இறங்கியுள்ளார். இது வெற்றிகரமாக முடிந்தால், மனித மூளை பற்றிய அனைத்தையும் அறிந்துகொள்ளலாம், மேலும் இதன் மூலம் பல மூளை நோய்களைக் கூட குணப்படுத்த இயலும் என்றும் கூறுகின்றார். அவரது ஆராய்ச்சி “Blue Brain” என்ற பெயரில் செய்துகொண்டிருக்கின்றார். மனித மூளையை டிஜிட்டல் உருவகப்படுத்துதலின் துணைகொண்டு ஒவ்வொரு நியூரானின் உடல் பண்புகளையும் அறிவதே இந்த ஆராய்ச்சி. இதில் IBM நிறுவனத்தின் புளூ ஜீன் (Blue Gene) சூப்பர் கணினி பெருமளவில் உதவுகிறது. ஹென்றியின் கருத்துப்படி, மனித மூளையில் ஏற்படும் நோய்களுக்காக ஒரு சிறப்பு மருந்து கூட இல்லை. ஒரு மூளை நோயினைக் கூட முழுமையாக, அறிவியலால் புரிந்துகொள்ள முடியவில்லை.

ஆகவே, இந்த மாதிரியான டிஜிட்டல் மூளை, மனிதனின் மூளை எப்படி செயல்படும், மருந்துகளுக்கு எப்படி விளைவினை ஏற்படுத்தும் என பல விவரங்களை விளக்கும். இதன் மூலம் அல்சைமர் மற்றும் மன அழுத்தம் போன்ற நோய்களைப் போக்க முடியும் என அவர் நம்புகிறார். தற்போதைய அறிவியலால் கண்டறிய முடியாத பலவற்றை இதன் மூலம் அடையலாம் என்றும், மூளை மற்றும் மருந்துப்பொருட்களுக்கு இடையே நடக்கும் விளைவுகளை உருவகப்படுத்துவதன் மூலம் மூளையைப் பற்றி பலவற்றை அறிந்துகொள்ள முடியும் என்றும் அவர் எண்ணுகிறார். இதுவரை செய்யப்படாத இந்த ஆராய்ச்சி, 2020 ஆண்டிற்குள் முடிந்துவிடும் என நம்பப்படுகிறது.