FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: Little Heart on November 28, 2014, 04:42:51 PM

Title: உடலின் திசுக்களை எலும்புகளாக மாற்றும் நோய்
Post by: Little Heart on November 28, 2014, 04:42:51 PM
“Fibrodysplasia ossificans progressiva” என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் நோய் தான் திசுக்களைக் கூட எலும்புகளாய் மாற்றும் மாயத்தினைச் செய்கிறது. இதனை “Stone Man Syndrome” எனவும் அழைக்கின்றனர். இதை நீங்கள் கேள்விப்பட்டதே இல்லையா? அப்படியென்றால் கட்டாயம் இந்த அறிவு டோஸைப் படியுங்கள்!

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தசை, தசைநாண்கள், தசைநார்கள் போன்றவை எலும்புகளாய் வளருமாம். இதற்கான அறிகுறிகள் சிறு வயதிலே ஏற்படத் தொடங்கும். உருவமற்ற வடிவில் கால் இருத்தல், வீக்கம் விரைவில் தோன்றி மறைதல் மற்றும் மூட்டுகளில் சிவப்பு நிறம் ஏற்படுதல் போன்றவை இதற்கான அறிகுறிகளாகும். இந்நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலுக்குள்ளேயே தேவையற்ற இடங்களில் எலும்புகள் வளரத் தொடங்கும், அது மட்டுமின்றி அவை உண்மையான உடல் எலும்புகளுடன் ஒன்றாகிவிடக்கூடும். எலும்பாக இவை உருவாவதால் அவற்றை நீக்குவது என்பது முடியாத காரியமாகிவிடுகிறது.

அதிர்ஷடவசமாக இந்த நோய் பரவலாகத் தென்படுவது இல்லை. 2 மில்லியன் மக்களில் ஒருவருக்கு மட்டுமே இதுபோன்ற நோய் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இதைக் கண்டறிவது மிகவும் அரிது என்பதால் இது மேலும் பிரச்சனைக்குரிய நோயாகும். இந்நோய் பாதிக்கப்பட்ட 500 பேரிடம் எடுக்கப்பட்ட டி.என்.ஏ, இரத்தம் மற்றும் பற்களின் மாதிரி போன்றவற்றில் இருந்து இதற்கு ஒரு தீர்வு காணலாம் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.