FTC Forum
தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: Little Heart on November 28, 2014, 04:40:50 PM
-
அழகு மற்றும் நடனத்திற்கு பெயர் பெற்ற வண்ண மயில்களின் வண்ணம் ஒரு மாயத்தோற்றம் தான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இதைக் கண்டிப்பாக உங்களால் நம்பவே முடியாது, ஏனென்றால் மயிலுக்கு அழகே அந்த வண்ண இறகுகள் தான். ஆனால் உண்மை சொல்லப் போனால், அவை வண்ணங்களே இல்லை நண்பர்களே! நாம் பார்ப்பது ஒரு வண்ண மாயத்தோற்றம் மட்டுமே. மயிலின் இறகுகள் பழுப்பு நிறத்தில் மட்டுமே இருக்கும். Schemochromes என்ற திட்டநிறமிகள் அதன் உடலின் மேற்பரப்பில் இருப்பதால் வெளியிலுள்ள ஒளியினுடன் குறுக்கீடு ஏற்பட்டு நமது கண்களுக்கு அவை வண்ண நிறங்களில் தெரிகின்றன.