FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on December 15, 2011, 10:37:20 PM

Title: எனது அன்னைக்கு
Post by: Global Angel on December 15, 2011, 10:37:20 PM
எனது அன்னைக்கு


என் அனபுத் தாயே
உன் திருவடிக்கு
எனது அன்பு
வணக்கம்,
என் பிஞ்சு
கை பிடித்து நீ
கற்று தந்த
தித்திக்கும் தமிழ்

நீ ஊட்டிய பாலைவிட
தமிழ்பால் அருந்திய
மயக்கத்தில் உன்
தமிழ் பாடல் கேட்டு -
உனது மடியில்
உறங்கிய நாட்கள்
அல்லவா நான்
உறங்கிய
இன்ப நாட்கள்

கண்ணுறங்கா நாட்களில்
நான் படிப்பதும்
நீ புகட்டிய
தமிழ் தானே
தமிழ் என்னை
தற்போது
தாலாட்டுவது இல்லையே


மாறாக உறங்கா
இரவுகளில் எனது
உற்ற நண்பனாய்
உதவி செய்தாலும் நான்
உறங்கா இரவுகளே
தமிழ் படிக்கும் இரவுகள்

உன் தமிழ் கேட்டு
குழந்தையாய் நான்
உறங்கினேன் அன்று
நீ கற்றுதந்த தமிழ்
படித்தும் - இரவினில்
கண் உறக்கம் வர
மறுப்பதுவும் ஏனோ


தாயே உன் பெருமை
தமிழும் அறிந்திருக்கு
என் தூக்கம்
உன்னுடனே ஏன்
எடுத்துச் சென்றாய்? -
எனக்கு
நீ கொடுத்த
தமிழ் இருக்கே
என்ற திருப்தி
அல்லவா உனக்கு?


உறக்கம் இன்றி
போனாலும்
தாயே நீயின்றி
நான் வாழ்ந்தாலும்
தமிழ் இருக்கு
என் இனிய
தமிழ் இருக்கு......

என்னுடனே
நீ கொடுத்த
தமிழ் இருக்கு
நன்றி தமிழுக்கா?
சொல்லி கொடுத்த
என் அன்பு தாய்க்கா?
எனதன்பு
இவ்விரண்டுக்கும் தானே!!!!
Title: Re: எனது அன்னைக்கு
Post by: ஸ்ருதி on December 17, 2011, 08:19:31 AM
super-a iruku...amma endral summa va ;) ;)
Title: Re: எனது அன்னைக்கு
Post by: RemO on December 17, 2011, 12:53:45 PM
thaayum tamilum onnu thana
Title: Re: எனது அன்னைக்கு
Post by: Global Angel on December 17, 2011, 08:23:25 PM
அதுதான் தாய் மொழி என்று சொல்கிறார்கள் ...
Title: Re: எனது அன்னைக்கு
Post by: RemO on December 18, 2011, 02:41:36 AM
தாய் மொழியை மறப்பது போல சிலர் தாயை கூட மறக்கின்றனர்