FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on December 15, 2011, 10:36:24 PM

Title: பயணம்
Post by: Global Angel on December 15, 2011, 10:36:24 PM

பயணம்  

பயண சீட்டு எடுத்து
பயணித்த பயணம்;
"பட்" என்று
வெடித்த வெடிகுண்டு
"சட்" என்று
நின்றது ரயில்

எண்ணிய ஊர்
போய்சேரவில்லை
எண்ணாதஊர்
போய்ச்சேர்ந்தனர்
செய்திதாள்களில் மூழ்கியவர்கள்
செய்திகளாய் அடுத்த நாள்
செய்தித்தாள்களில்


பதிவு செய்யப்படாத
பயணசீட்டு
இருக்கை பிடிக்க
சன்னல் வழியாய்
கைக்குட்டை போட்டு
இடம் பிடித்து
அவசரமாய் இருக்கையில்
அமர
சாமர்த்தியமாய்
சாதித்து விட்டபெருமிதம்


"டமார்" என்ற
சப்தம் கேட்க்க
உலக கால்
பந்து வீரர் அடித்த
பந்தை போல
தூக்கி அடித்த
போது
இரத்த குழம்பில்
உடல் சிதற
மரணத்தில்
பிரபலம் ஆயினர்
இரயில் குண்டு
வெடிப்பால்


ஐயகோ!!! மானுடமே!!!!!
இதுதானே
மனித வாழ்வு என
ஏனையோர் மெய்சிலிர்க்க


சில நாளில்
இச்செய்தி மறக்க
வேறொரு செய்தி
தலையங்கம் !!!
எந்த மாற்றமும் இன்றி
முன் போல
அதே துரித
கதியாய் இயங்கும்
மனித ஓட்டம்!!!!


தீவிரவாதம் என்னும் முகமூடி அணிந்து
கொலைகள் செய்யும் கொலைகாரர்கள்
கையாலகதவர்களின் கடைசி முயற்சி
மன நோயாளிகளின் கூட்டம்
பிணம் தின்னி கழுகுகள்.



pidiththathu
Title: Re: பயணம்
Post by: ஸ்ருதி on December 17, 2011, 08:21:40 AM
Theevara vaatham enndaiku kuraiumo
andaiku than ellame nallatha amaium
Title: Re: பயணம்
Post by: RemO on December 17, 2011, 12:51:56 PM
travel panurapala konjam payama than iruku
epa vedikum epa kavupanganu onum theriyala