FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on December 15, 2011, 10:35:09 PM

Title: நிலா தோழன்
Post by: Global Angel on December 15, 2011, 10:35:09 PM
நிலா தோழன்  




பெட்டி பெட்டியாய்
கட்டிட கூட்டம்
விட்டத்தை விட்டால்
வேறிடம் காண்பதற்கில்லை

ஜன்னல் வழியே வானிலிருந்து
எட்டி எட்டி எனை நீ பார்க்க
தூக்கம் கெடும் இரவெல்லாம்
துக்கம் வந்தபோதெல்லாம் - உன்
தூய முகம் கண்டு - என்
துயர் மறப்பேன் சட்டென்று

கைக்குட்டையாம் மேகமதில் - உன்
வெண் முகமதை மூடி
கண்ணாமூச்சு விளையாட்டாய் - நீ
மறையும்போதெல்லாம்
என் ஏக்கம் பெருமூச்சாய் - உன்
மீது மோதியே
மேகமதை ஓட செய்து
உன்னழகு முகம் கண்டு
இரவெல்லாம் நான் மகிழ்வேன்

பல நாட்கள் உன்னை காணா
ஏக்கத்தோடு காத்திருப்பேன் - நீ
எங்கு சென்றாய் வெண்ணிலாவே
என்பேன் நான் - நீயோ
ஏனைய நாடுகளில்
தூக்கமில்லா துயருறும் எனை
போன்ற நண்பர்களை
பார்த்து வந்தேன் என்பாய் நீ

ஆமாம் உனக்கென்ன பாஸ்போர்ட்டா
பயணசீட்டா என்பேன் நான் ஏக்கத்தோடு.



padithathil rasithathu
Title: Re: நிலா தோழன்
Post by: ஸ்ருதி on December 17, 2011, 08:23:04 AM
wow nice....nalla pagirvu
Title: Re: நிலா தோழன்
Post by: RemO on December 17, 2011, 12:07:48 PM
nice angel
Title: Re: நிலா தோழன்
Post by: Global Angel on December 17, 2011, 08:20:40 PM

நன்றி .