(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Faval%2F2014%2F12%2Fndmxzj%2Fimages%2Fp101.jpg&hash=99e9bd85f4ae16caa2ae3dd1db1a987455f1dd3a)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F4.bp.blogspot.com%2F-UJ9UJ2GxTBw%2FVG6P3bZISfI%2FAAAAAAAAO3k%2FX3RcNX0YbTk%2Fs1600%2Fwrapper%281%29.jpg&hash=5aaf1b68d643883b085b58c3c826f8577fe47882)
"உலகத்திலேயே மிகச்சிறிய, மிகவும் பயனுள்ள பார்மஸி எது தெரியுமா? நம் வீட்டு சமையல் அறையில் இருக்கும் அஞ்சறைப்பெட்டிதான். குறிப்பாக, மழைக்காலத்தில் நம்மைப் பாடாய்ப்படுத்தும் ஜலதோஷம், இருமல், ஜுரம், உடல்வலி போன்ற பல்வேறு சங்கடங்களுக்கு... மிளகு, சீரகம், சுக்கு, தனியா போன்றவற்றின் மூலம் நிவாரணம் கிடைப்பதோடு, வரும் முன் காக்கவும் செய்யலாம்" என்று கூறுகிறார் சமையல்கலை நிபுணர் நங்கநல்லூர் பத்மா. அஞ்சறைப்பெட்டி பொருட்களுடன் வேப்பம்பூ, பூண்டு, இஞ்சி, வெற்றிலை, காய்கறி போன்றவற்றையும் பயன்படுத்தி, மழை குளிர் சீஸனில் ஏற்படும் உடல் அசௌகரியங்களைத் தவிர்க்க உதவுவதோடு, ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் கைகொடுக்கும் '30 வகை பத்திய சமையல்’ ரெசிப்பிக்களை இங்கே வழங்கியிருக்கும் பத்மா,
''இந்த ரெசிப்பிக்கள் நாவுக்கு ருசியாக இப்பதோடு... மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடத் தூண்டும் என்பது கூடுதல் சிறப்பு' என்று உற்சாகம் பொங்க கூறுகிறார்.