FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on November 18, 2014, 07:56:03 PM
-
அம்மா ரெசிப்பி; தாய்ப்பால் பெருக... பப்பாளி பால் கூட்டு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Fdoctor%2F2014%2F12%2Fnjrlmg%2Fimages%2Fp54.jpg&hash=92503cf7da8743423cb66340fbe8e8d9d28aa6d1)
'சின்ன வயசுல பப்பாளின்னாலே, எனக்குப் பிடிக்காது. என் அம்மா, பப்பாளிக் கூட்டுனு சொல்லாமலேயே எனக்குச் சாப்பிடப் பழக்கப்படுத்தினாங்க. அப்புறம், ரொம்பவே பிடிச்சுப்போச்சு. வயசாக ஆக, உடலுக்கு எதெல்லாம் நல்லதுன்னு தேடித்தேடி சமைக்கிறேன். அதுல இந்தப் பால் கூட்டும் ஒண்ணு. இது பாலூட்டற தாய்மார்களுக்கு ரொம்ப நல்லது' என்கிறார் சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த சாந்தா கோபாலன்.
தேவையானவை:
மிகவும் இளசான, வெண் நிறத்தில் உள்ள பப்பாளிக்காய் சிறியது 1, சர்க்கரை 2 டேபிள்ஸ்பூன், தேங்காய்த் துருவல் 2 டேபிள்ஸ்பூன், உப்பு ஒரு சிட்டிகை, உளுத்தம்பருப்பு, நெய் தலா ஒரு டீஸ்பூன், பால் ஒரு கரண்டி.
செய்முறை:
பப்பாளியைத் தோல் சீவி, விதைகளை நீக்கி, சிறிய துண்டுகளாக நறுக்கி, உப்பு சேர்த்து வேகவைக்கவும். நன்றாக வெந்தவுடன், தேங்காயை அரைத்து, வெந்த காயுடன் கலந்து, இரண்டு நிமிடங்கள் வேகவைக்கவும். பிறகு, சர்க்கரை சேர்க்கவும். கடைசியில் பாலை விட்டுக் குறைந்த தீயில் வைத்து லேசாகக் கொதித்ததும் இறக்கவும். உளுத்தம் பருப்பை நெய்யில் வறுத்துப் போடவும். நன்றாக வேகவைப்பதாலும், சர்க்கரை, நெய், பால் சேர்ப்பதாலும் நல்ல சுவையுடன் இருக்கும்.
சோஃபியா, டயட்டீஷியன்: பெண்களுக்குப் பப்பாளிக்காய் மிகவும் நல்லது. இதில் அதிக அளவு பீட்டாகரோட்டின் இருக்கிறது. காயுடன் பால் சேர்ப்பதால், சத்துக்கள் உடலில் கிரகிக்கப்படும். கண் பார்வை கூர்மையடையும். பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட்டுவர, தாய்ப்பால் பெருகும். மாதவிலக்குப் பிரச்னை சிக்கல் நீங்கும். வயிற்றிலுள்ள கிருமிகள் அழியும்.
வாரம் இருமுறை பப்பாளிக்காயை சமைத்து சாப்பிட்டால், உடல் எடை குறையும். உடல் பலமடையும். ரத்த விருத்திக்கு நல்லது. நரம்புகள், பற்கள் பலப்படும்.