FTC Forum

General Category => அறிமுகம் - Introduce Yourself => Topic started by: aasaiajiith on December 15, 2011, 04:14:48 PM

Title: வணக்கம் FTC நண்பர்களே !
Post by: aasaiajiith on December 15, 2011, 04:14:48 PM
என் இனிய FTC நண்பர்களுக்கு , என் முதல் கண் வணக்கங்கல். என் அறிமுகம் தேவையில்லை என்று நினைக்கின்றேன் ,தரமாய் ,தகுமாய் , தகுதியாய் தெரிவித்து அறிவித்துக்கொள்ள தனிதகுதிகள் ஏதுமில்லை என்பதால் அறிமுகம் தேவையில்லை என நினைக்கின்றேன். இருந்தும் தவறே ஏதும் புரியாமல் தவறாய் ,தாழ்மையாய் புரிந்துகொள்ளபட்டதால் அத்தவறான புரிதலை திருத்தம் செய்வதற்காக அல்ல தெளிவு படுத்த கடமை பட்டுள்ளேன்.
                  மாற்று தளத்தின் அரட்டை அறையினில் மற்றோர் போற்றும் பொருப்பினில் மட்டற்ற  மகிழ்ச்சியில் மகிழ்ந்திருந்தேன் .நறும் பூங்காற்றோன்றின் அன்பு கட்டளை  ஏற்று, அறிமுகம் ஆனேன் FTC அறைக்கு முன்னொரு நாள் நேற்று .நான் மாற்று அரட்டை அறையின் பயன்பாட்டாலன் என்று தெரிந்தும் யாரும் மற்றவர்களுக்கும் எனக்கும் மாற்றம் இல்லாமல்
தான் பழகினீர்கள் ,யாரும் என்னை தூற்றாமல்  போற்றவே செய்தீர்கள் .அளவிடமுடியா ஆனந்தம் அடைந்தேன் .கவிதைத்தளம் ஒன்று கவின்பட கவின் சிறப்போடு செயல்படுவதை தெரிந்தேன்
நுழைந்தேன் , ஒத்த விருப்பம், கருத்து, ஆர்வம் கொண்ட தையல் ஒருவளின் அறிமுகம் கொண்டேன்
அவள் தம் கவிகளை படித்தேன் ,ரசித்தேன், ருசித்தேன் ஒவ்வொன்றும் தித்திக்கும் மலை தேன் .
நான் சுவாசிக்கும் தமிழையும், கவிதையும் அவள் நேசிப்பதை அறிந்து மலைத்தேன் , அவள் கவிகளின் வரிகளின் இனிமையில் ஈர்க்கப்பட்டு பதில் கவிதை பதித்தேன் .ஒரு மாயம் மட்டும்
புரியவில்லை ? அவள் பதிவுகளையும் பிற பதிவுகளையும் அச்சு பிசகாமல் அப்படியே அழகாய்
அப்பழுக்கில்லாமல் எடுத்துகொள்பவர்கள், அதற்கு பதிலாய் நான் பதிக்கும் பதில்களை மட்டும் அழுக்காய் அகோரமாய் எடுத்துகொள்வது ஏன் ? கவிதையை வெறும் கவிதை கண்ணோட்டத்தில்
காணாமல் காதல் சாயம் பூசியதேன் ? ஏதும் ஊர்ஜிதமாய் தெரியாமல் எங்களை இணைத்து எதேதோ
 பேசியது ஏன் ? என் தமிழ் ஆர்வத்திற்கும் கற்பனை வளத்திற்கும் ,கவி படைக்கும் திறனை
மேம்படுத்திக்கொள்ள தோதான இடம் என்ற எண்ணத்தில் தான் கவிபல படைத்தேன். மற்றபடி
யார் மீதும் எப்போதும் தீரா காதலோ இல்லை . இதை என் சுயநினைவோடு தடுமாற்றம் இன்றி
தெளிவாய் சொல்லிகொள்கிறேன் . இனி நீங்கள் காட்டும்  மாற்றம் பொறுத்தே நான் தொடர்வதும்,
கவிதை பதிவுகள் தொடர்வதும் .
                                                                                                    என்றும் அன்புடன்
                                                                                                          ஆசை அஜித்
 
Title: Re: வணக்கம் FTC நண்பர்களே !
Post by: செல்வன் on December 15, 2011, 04:27:17 PM
ஆசை அஜித் களங்கபடுத்த நினைப்பவர்களின் கயமை கண்டு கலங்காதீர் . கள்ளம் கபடமற்றவனாய் உன்னை உணர்ந்த நண்பர்களோடு இணைந்து உன் கவிப்பயணத்தை தொடர்ந்து செல். கால சக்கரம் உன்னை உயர்ந்தவனை காட்டும் நிலைமை வெகு விரைவில் அனைவருக்கும் எட்டும். உன் சிந்தனைகளை சோரவிடாமல் களமிறங்கி பொது மன்றத்தை உன் படைப்புகளால் அலங்காரம் செய்து கொண்டே இரு. போற்றுவார் போற்றட்டும் தூற்றுவாரும் போற்றும் நற்காலம் கனியும். நன்கு அறிமுகம் கண்ட உள்ளம் நீ இன்று மீண்டும் அறிமுக பகுதியில். விந்தைதான்.
Title: Re: வணக்கம் FTC நண்பர்களே !
Post by: aasaiajiith on December 15, 2011, 06:03:09 PM
அன்பானவரே ! பண்பானவரே !
                          உங்கள் அன்பிற்கும் , ஆறுதலுக்கும் கைமாறு ஆற்றும் ஆற்றல் அற்றவன் ஆகிருக்கிறேன் . அறிமுக அரங்கில் என் வரிகளை பிரவேசித்தது , விளக்கங்களை பதிவுசெய்தது
அறிமுகதிற்காக அல்ல ,உண்மை நிலையை அரங்கமும் அரங்கத்திற்கு அறிமுகம் ஆனவர் அனைவரும் அறிந்திட  ஆக்கபூர்வமாய் அறிவிக்கவே ! ஆகையால் ஆச்சரியம் அடைய வேண்டாம்
அன்பரே !
                                                             அன்பும் ஆக்கம்முடன்

                                                                                                                             ஆசைஅஜீத்
 
Title: Re: வணக்கம் FTC நண்பர்களே !
Post by: gab on December 15, 2011, 09:49:48 PM
கவிதையை வெறும் கவிதை கண்ணோட்டத்தில்
காணாமல் காதல் சாயம் பூசியதேன் ? ஏதும் ஊர்ஜிதமாய் தெரியாமல் எங்களை இணைத்து எதேதோ
 பேசியது ஏன் ? 



sambanthapattavargal ithai unaruvargal ena nambukiren ajith. Nengal ungaludaiya vazhiyileye mun pola pangu kollungal.Matravargalai pesuvathai patri sattai seiyatheergal.Ungalai anaivarum purinthu kolvargal viraivile.
Title: Re: வணக்கம் FTC நண்பர்களே !
Post by: Global Angel on December 16, 2011, 02:43:50 AM
ஆசை அஜித் வருக வருக ... தாங்கள் வந்து நீண்ட நாளாகியும் இங்கு உங்களை வரவைத்த கவிதைக்கு நன்றிகள் ...  தங்கள் கவிதைகளுக்கு பதில் கவிதை கொடுத்தது மட்டுமே என் பணி.. அதை ஆராய்ந்து காதலா இல்லையா என்று பார்க்கவில்லை நான் ... புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன் .. தங்கள் கவிதைகளால் மேலும் மிளிர வாழ்த்துகின்றேன் .

                                       (https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi966.photobucket.com%2Falbums%2Fae141%2Fletnotyourheartbetroubled%2Ffgif53.gif&hash=db34dce11e987abb88f826a1209ac0823ff0f1eb)
Title: Re: வணக்கம் FTC நண்பர்களே !
Post by: sundaresan on December 18, 2011, 06:54:44 AM
அன்பு நண்பர் ஆசை அஜித் அவர்களுக்கு , என் வணக்கம் .

தாங்கள் எழுதி இருக்கும் இந்த வாசகங்கள் எல்லோருடைய மனதை உருக்குவதாக இருகிறது. என் மனதையும் கூட. .
இங்கே அனைவரும் ஒரு குடும்பமாக இருக்கிறோம் .  நம் வீட்டில் இருக்கும் நேரத்தை விட அதிக நேரம் இங்கே இருக்கிறோம். நம் கவலைகளை மறந்து சகோதர பாசத்தோடு பழகுகிறோம். 

நம் வீட்டில் ஒரு சகோதரிக்கு ஒன்று என்றல் ... ஒரு உண்மையான சகோதரனுக்கு கோபம் வருவது இயற்கையே.  அதே போன்று தான் சில விஷயங்கள் சிலர் மனதை புண் படுத்தி இருக்கலாம்.  ஏன் என் மனதை கூட. . .

இவர் நல்ல தமிழ் பற்று உடையவர் ஆயிற்றே . . . இவர் இப்படி எல்லாம் நடந்து கொள்ளமாட்டார் என்று என் மனம் சொன்னாலும் . . . தாங்கள் ஒருவரிடம் மட்டும் உரையாடுவதை தவிர்த்து . . . இன்று forum ல் தெரிவித்ததை போல main ல் சொல்லி இருக்கலாம் தாங்கள் கருத்துகளை.  சம்பந்த பட்டவரே உங்களிடம் உரையாடுவதை தவிற்க chat பக்கம் வராத நாட்களும் உண்டு.
இந்த நிகழ்ச்சி சில சகோதரர்களுடைய மனதை புண் படுத்துவதை போல இருந்தது.

எது எப்படியோ . . . .  கருத்து வேறுபாடு என்பது தவிர்க்க முடியாத ஒன்று. 

தாங்கள் கவிதையை கதை ஆக்காமல் . . . கவிதையை மட்டும் ரசித்து . . . உங்கள் சகோதரி கவிதைக்கு மட்டும் உங்கள் பாராட்டை தெரிவியுங்கள்.

நான் உங்களை போல வேறு ஒரு அரட்டை அரங்கில் எந்த பொறுப்பிலும் இல்லாதவன் எனக்கு உங்களை போல அனுபவம் எதுவும் கிடையாது. மனதில் தோன்றியதை / நடந்ததை அப்படியே கொட்டிவிட்டேன்.


தாங்கள் தமிழ் பற்று வாழ்க வளர்க . . . தாங்கள் மென்மேலும் கவிதை விதை விதைக்க வாழ்த்துகள்.  உங்களையும் உங்கள் திறமையும் சரியான பாதையில் செல்ல எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

என்னுடைய கருத்தில் தவறு இருந்தால் மன்னிக்கவும்.

உங்கள் அன்பு தோழன் SundaresaN




 
Title: Re: வணக்கம் FTC நண்பர்களே !
Post by: suresh on December 18, 2011, 12:46:09 PM
ulagame naadagamedai ada nu shakespeare sariya than solli irukaru  :) :) athukunu aniyayathuku performance tharangale  :) :) banana la oosi ethura vaarthaigal  :) :) pvt la thagatha vaarthaigal  :) :) main la james bond 007 pola socialism  :) :) :)
Title: Re: வணக்கம் FTC நண்பர்களே !
Post by: KungfuMaster on December 19, 2011, 12:29:28 PM
adonga :D aamai vaayansgala :D.

ennapa ischool pasanga pola "teacher ivan enna kilitan, avan en sadaya pudichi ilukuran" nu complaint panitu irukinga... ada ischool pasanga kuda paravalla adichikitangana apram konja nerathula atha maranthu jolly ah viladuvanga... namma kadhai romba mosamalla iruku...

chat forum ellam ethukaga? tensionla irunthu relax pannikirathuku, 4 nalla vishayangala therinjikirathuku thana? neenga ennana ingayum vanthu sogama ukkanthukitu irukinga :D :D vanthoma jolly ah ellartayum pesunoma arattai adichoma santhosama irunthomanu irukanum... nammalala 4 per sirikalanalum paravalla 1 aal kuda sad aaga kudathu nu nenachitu arattai adikanum :D...

oru sila vishayangal nadakathan seiyum, atha avoid pannanum or epdi solve pannalamnu think pannanum atha vittutu atha oru advertisement pola pottu vachita prachana theenthuruma?

ellarukum sogam irukum atha avanga avanga personal ah theethukanum... oruthar kuda palagurathu pesurathuna ethuku chatroom? thayavu senji sad aagura pola vishayangala thaniya share panikonga... pothuvana idathula share panni ellarayum kashta padutha venam...apram Kungfumaster ah neenga kolakara master ah than paapinga :D ithu verum dialog alla....hmmm....vera enna sollurathu sari dialog ne vachikonga..

(serious ah soliruken... kokkamakka yarachum chatla vanthu kekapikkanu sirichinga apram apram nanum siripen soliten:@)
Title: Re: வணக்கம் FTC நண்பர்களே !
Post by: MysteRy on January 07, 2012, 11:05:01 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1033.photobucket.com%2Falbums%2Fa419%2Ftabitha_057%2Ftree.gif&hash=8d5423a5a96980a41d994aad62459ae5b55f0091)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.animated-gifs.eu%2Falphabet-pj-dance%2F0008.gif&hash=478d59c8508a769c844692485e2ac6ffbf7bb721)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.animated-gifs.eu%2Falphabet-pj-dance%2F0009.gif&hash=d1feaa8beca890a91d9e506a6d9ff084e934c7de)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1033.photobucket.com%2Falbums%2Fa419%2Ftabitha_057%2Ftree.gif&hash=8d5423a5a96980a41d994aad62459ae5b55f0091)


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1033.photobucket.com%2Falbums%2Fa419%2Ftabitha_057%2Fcoollogo_com-146033828.gif&hash=08adff6a18914e81cf6ba36824d1dfaae02e2ff6)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1033.photobucket.com%2Falbums%2Fa419%2Ftabitha_057%2F1-13-1.gif&hash=706c8bc244b57410748b8c3a73c9bc190aad862b)
Title: Re: வணக்கம் FTC நண்பர்களே !
Post by: suthar on March 09, 2012, 01:01:14 PM
ajith nayaganey
peyaril evvalavu eerpu
pengaluku irukathaney seiyum
athanaal than aasaiyai serthu kondaya....
aasai nanbaney un
aasai ellam niraasai
aagakudathenbathu en
aasai...........