FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on November 14, 2014, 08:58:43 PM

Title: ~ கறிவேப்பிலை மருத்துவம்:- ~
Post by: MysteRy on November 14, 2014, 08:58:43 PM
கறிவேப்பிலை மருத்துவம்:-

(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xfa1/v/t1.0-9/s526x296/1511627_821131651242485_3179744096627462256_n.jpg?oh=d5fdd5d422d9f634ca2fbdf1c8f4a0ce&oe=54D1E5B1&__gda__=1424731359_8c012f6bd5ac14cf4945562ec9b80a34)


கறிவேப்பிலையில் புரதம், இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், கொழுப்பு, கார்போஹைட்ரேட், வைட்டமின் ஏ, வைட்டமின் சி ஆகியவை உள்ளது. இதனை உண்டால் கண் பார்வைக் கோளாறுகள் ஏற்படாது. எலும்புகள் வலுப்பெறும். சோகை நோய்கள் ஏற்படாது. ஊரில் தொற்று நோய்கள் இருந்தாலும் நமக்கு வராமல் தடுக்கும் ஆற்றல் கருவேப்பிலைக்கு உண்டு. புண்கள், வாய்புண்கள், பல் ஈறு வலுப்பெற கருவேப்பிலை அருமருந்தாகும். மலச்சிக்கலைத் தடுத்து ஜீரண சக்தியை அதிகரிக்கும். பித்தம், வாந்தியைத் தடுக்கும். தலைமுடி நன்கு வளவரவும், கண்களுக்கு ஒளிதரவும் கறிவேப்பிலையில் உள்ள சத்துக்கள் உதவும். பசி எடுப்பதில்லையா? ஜீரண மந்தமா? கறிவேப்பிலையை வறுத்து அதனுடன் மிளகு, சீரகம், சுக்கு இவற்றை பொடி செய்து உப்பு சேர்த்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்.