FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on November 14, 2014, 02:14:57 PM
-
உப்பு கண்டம் கறி (குர்பாணி கறி)
தட்டு கறி, உப்பு கண்டம்,காய போட்ட கறி எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.
முன்பு காலங்களில் ரங்கூன், பர்மா, மலேஷியா நாடுகலுக்கு பொருள் ஈட்ட
செல்லும் போது அங்கு ஹலால் உணவு கிடைக்குமோ இல்லையோ ஆகையால். நம் நாட்டவர் கறி, இறால், பீஃப் போன்ற வற்றை பதப்படுத்து அல்லது காய வைத்து கொண்டு செல்வார்கள் இது எத்தனை நாள் ஆனாலும் கெடாது.
தேவையான பொருட்கள்
துண்டு கறி - ஒரு கிலோ
உப்பு - இரண்டு மேசை கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - முன்று மேசை கரண்டி
மிளகாய் தூள் - நாலு மேசை கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
செய்முறை
கறி துண்டாக தடிமானாக போடாமல் சிறிது சப்பையாக போடனும் போட்டு நன்கு கழுவி தண்ணீரை வடித்து அதில் உப்பு,மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வெறவி பத்து நிமிடம் ஊறவைக்க வேண்டும்.
பிறகு சுத்தமான சணல் கயிறை கழுவி,சுத்தாமான பெரிய கோணி ஊசியில் ஒவ்வொரு கறியா கோர்த்து ஒரு இன்ச் இடைவெளி விட்டு துணி காய போடும் கொடியில் மாலை போல் தொங்க விட்டு வைக்கவேண்டும்.
காயவைக்கும் போது கூடவே ஒரு கருப்பு துணி வைப்பார்கல் அது காக்கா வரமால் இருக்க.
இப்போது நல்ல பத்து பதினைந்து நாள் காய்ந்த கறியை வீட்டிலும் உபயோகப்படுத்துவார்கள்.
வெளி ஊருக்கும் கொண்டு செலவார்கள்.
இது பொரிக்கும் போது அத கறிய ஒரு பேப்பரில் வைத்து நல்ல பஜ்ஜி மாதிரி தட்டி பிறகு கொஞ்சமா எண்னை வைத்து பொரித்து எடுக்கவேண்டும்.
தொட்டுக்க ஒன்றும் இல்லாத போது, திடீர் சமையலுக்கு இது மிகவும் கை கொடுக்கும்.
அதை தட்டி பொரிப்பதால் தட்டி பொரித்த கறி என்று பெயர்.
குறிப்பு:
வருடா வருடம் ஹஜ் பெருநாள் வரும் போது எல்லா வீடுகளிலும் ஆடு குர்பாணி கொடுப்பார்கள், அப்போது எல்லா வீட்டிலிருந்தும் கறி வந்து குமியும் அந்த காலத்தில் பிரிட்ஜ் கிடையாது நிறைய பேர் வீட்டில், ஆகையால் கூடுமான வரை சமைத்து விட்டு, கொஞ்சம் கறியை உப்பு, மஞ்ச பொடி போட்டு சுருட்டி வைப்பார்கள். அது மறு நாள் சமைக்க மீதியை முழுவதும் இந்த மாதிரி காய போட்டு பதப்படுத்தி வைப்பார்கள்.