FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on December 15, 2011, 07:15:23 AM

Title: என் சென்னை டமிலை லைக்கு பண்ணுன ரோசாக்கோசரம்
Post by: aasaiajiith on December 15, 2011, 07:15:23 AM
ரோசா    பொண்ணு ,சின்ன ரோசா பொண்ணு
ஒன் பேர சொல்லும்  ஆசை கண்ணு 
 
ரோட்ல சுத்தினுந்தேன் சிங்கில்லா- என்
ஹார்ட்ல ஆய்ட்டே  மின்கில்லா               

                                              (ரோசா  பொண்ணு )
 
ஊரெல்லாம்  பேனர் கட்டி - ஒன்ன
பேமசு ஆக்கிடுவேன்
பிட்நோட்டிசு பலநூறு அடிச்சு - ஒன்
மனசை நான் தூக்கிடுவேன்
 
மய பெஞ்சா தான் நம்ம ரோடு நாஸ்தி - உன்னை
நெனிச்சாலே என் மன்சு நாஸ்தி தான்
 
பேக்கா நானும் சுத்தி வந்தேன் - என்னை
சோக்கு ஸ்டாரா மாத்தி  தந்தே
 
                                               ( ரோசா  பொண்ணு )
பின்னாடி பாக்கசொல்லோ
 சொம்மா  சோக்காதான் நீ தெரிரே

முன்னாடி எப்போ பாப்பேன்
எம்மான்  நாலு கெழமைனு   தெரியிலே

நெயளுக்கும் நெத்தி சுருங்காம உன்னை
பஸ் ஸ்டாண்டுல உக்காரவைக்கடுமா?

வேர்கடலை வாங்கி தந்திடுவேன் - வேறயாராண்டியும்
கடலைபோட்டா நொந்துடுவேன்

                                            (ரோசா பொண்ணு )
Title: Re: என் சென்னை டமிலை லைக்கு பண்ணுன ரோசாக்கோசரம்
Post by: Global Angel on December 15, 2011, 10:30:26 PM
இன்ன ஆசை வேற்கடல வாங்கி தரத்தான் இம்மாம் பாடா ... நானே வாங்கி துன்னுகுறேன் வாத்யாரே ..நல்ல கீது .... :D :D :D
Title: Re: என் சென்னை டமிலை லைக்கு பண்ணுன ரோசாக்கோசரம்
Post by: aasaiajiith on December 16, 2011, 03:53:34 PM
இன்னா மா ரோசா பொண்ணே, உன்னாண்ட படா பேஜாரா பூட்சி ,
நான் எய்துன  பாட்டை போயி கவிதே நு சொல்லிகினியே !
அட்த தபாலேருந்து பாட்டுக்கு பின்னாலயே இலாட்டி கீளியே
அது இன்னா படத்தோட இன்னா பாட்டுன்னு  போட்டுட்றேன் !

சூரிய வமஷம் படத்துலேருந்து ரோசாபூ சின்ன ரோசா பூ பாட்டு கண்ணு !