FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: ஸ்ருதி on December 14, 2011, 11:47:45 PM

Title: ***பெண்ணிடம் ஆணுக்குப் பிடிக்காதது***
Post by: ஸ்ருதி on December 14, 2011, 11:47:45 PM
பெண்ணிடம் ஆணுக்குப் பிடிக்காதது...

    பிறரை இகழ்வது : – மற்றவர்களின் தோற்றத்தை இகழ்வதையும், அவர்களைத் தங்களை விட அறிவில் குறைந்தவர்கள் என நினைப்பதையும் ஆண்கள் வெறுக்கின்றனர். அதுவும் மற்ற பெண்களைப் பற்றி பெண்கள் அதிகமாகப் பேசுவார்கள். இதற்குக் காரணம் மற்றவர்கள் தனக்கு போட்டியாக வந்து விடக் கூடாதே என்கின்ற எண்ணம் தான்.

    அறிவுரை : மற்றவர்களின் அறிவுரையை யாரும் கேட்டுக் கொள்வதில்லை. ஆண்கள்- பெண்களிடமிருந்து அறிவுரை கிடைத்தாலும் காதில் போட்டுக் கொள்வதில்லை.

    செலவு : சில பெண்கள் , தன் பாய் பிரண்ட் மட்டும் தான் செலவு செய்ய வேண்டும் , தான் திருப்பி செலவு செய்யக் கூடாது என நினைக்கின்றனர். தன்னை மட்டும் செலவு செய்ய வற்புறுத்தும் பெண்களை இக்காலத்து ஆண்கள் விரும்புவதில்லை. விட்டு விலகச் செய்வார்கள்.

    நம்பிக்கையின்மை : – உங்கள் பாய் பிரண்ட், உங்கள் தோழியுடன் பழகுவதை தவறாக நினைக்க வேண்டாம். அவர் மீது வைக்கும் நம்பிக்கை உங்களை அவரிடம் உயர்வாக காண்பிக்கும்.

    விவாதம் : சில பெண்கள் தன் பாய் பிரண்டிடம் எதற்கெடுத்தாலும் வாதம் புரிவார்கள்(தாங்கள் சொல்வதே சரி என்பார்கள் ) இது கூட ஆண்களுக்கு கொஞ்சம் கூடப் பிடிப்பதில்லை.

    தன்னம்பிக்கையின்மை : – அவர்களோடு இருக்கும் சமயத்தில் எனக்கு எப்பொழுதும் பிரச்சினைதான் எனக்கு நிம்மதியில்லை. பாதுகாப்பில்லை என உளறிக் கொட்டுவதை நிறுத்தவும். தன்னம்பிக்கை மிகுந்த பெண்களைத் தான் ஆண்கள் அதிகம் விரும்புவார்கள்.

    குப்பைகள் : – எப்பொழுது பார்த்தாலும் பழைய குப்பைகளை கிளறிக் கொண்டு இருந்தாலும், கடந்து போன விஷயங்களைப் பேசினாலும் ( காதல் உட்பட ) இப்படிப்பட்ட பெண்களை ஆண்கள் வெறுத்து ஒதுக்குவார்கள். ஒருவரையொருவர் பரஸ்பரம் புரிந்து கொள்ள ஒரு தடவை மட்டும் பழைய விஷயங்களைச் சொல்வது நல்லது. மீண்டும், மீண்டும் பழைய குப்பையைக் கிளறினால் அதே குப்பையில் உங்கள் காதலும் மூழ்கிவிடும்.

    வெட்டிப் பேச்சு :- மற்றவர்களின் ஆடை, யாரெல்லாம் சந்திக்கிறார்களோ அவர்களைப் பற்றி ஏதேனும்”கமெண்ட்” (விமர்சனம்) தனக்கு மிகவும் பிடித்த நாயகனைப் பற்றி சதா பேச்சு என்று மட்டும் இருந்தால் உங்கள் பாய் ஃபிரண்ட் சீரியஸ் ஆன விஷயம் எதுவும் இவளிடம் இல்லையா? என உங்களிடமிருந்து அவர் ஓடக் கூடும்.

    நேரம் தவறாமை : – காத்திருப்பது என்பது எல்லோருக்கும் வெறுப்பு ஏற்றக் கூடிய விஷயம். ஓரளவு தான் யாரும் தாக்குப் பிடிப்பார்கள். அதுவும் விட உங்கள் மீதுள்ள பிரியத்தால் மட்டுமே காத்திருப்பார்கள். அதிகமாகப் போனால் வெறுக்க ஆரம்பிப்பார்கள்.

Title: Re: ***பெண்ணிடம் ஆணுக்குப் பிடிக்காதது***
Post by: RemO on December 15, 2011, 01:00:16 AM
unmai than shur ithelam kandipa engaluku pidikathu

all girls iniyathu thirunthunga
Title: Re: ***பெண்ணிடம் ஆணுக்குப் பிடிக்காதது***
Post by: Global Angel on December 15, 2011, 08:52:40 PM
பசங்க மட்டும் என்னவாம் எல்லம் இப்டிதான் .... நல்ல தகவல் ஸ்ருதி .....  
Title: Re: ***பெண்ணிடம் ஆணுக்குப் பிடிக்காதது***
Post by: RemO on December 16, 2011, 02:13:55 AM
angel pasanga evalavo better:D oru ponney ipadi advise panuthu ithu pothatha