FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on November 05, 2014, 09:11:48 PM

Title: ~ நஞ்சை முறிக்கும் தும்பை! ~
Post by: MysteRy on November 05, 2014, 09:11:48 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F-lr7oCGwjgZI%2FVFjA36CJkWI%2FAAAAAAAAOy8%2FlE1VlTqE5cA%2Fs1600%2F2222.jpg&hash=f32fb161491d1b365fdd92181b810ffbf5880061)

'வயல்வெளி், சுவரோரம் என எங்கும் வளர்ந்து, எளிதில் கிடைக்கக்கூடிய மூலிகை, தும்பை. இதன் இலை, பூ என எல்லாப் பகுதிகளுமே சத்துக்கள் நிறைந்தவை. செலவே இல்லாமல், சத்தான உணவு சாப்பிட நினைப்பவர்களுக்கு பெஸ்ட் சாய்ஸ் தும்பைதான். இதை துவையலாகவோ, சூப் செய்தோ சாப்பிடலாம். தும்பை இலை உடலி்ல் உள்ள நச்சுப் பொருள்களை வெளியேற்றி, ஆரோக்கியத்தை அள்ளித் தரும்'' என்கிறார், சென்னை குமணன் சாவடியைச் சேர்ந்த பிரேமாவதி. தும்பைத் துவையல் எப்படிச் செய்வது?

தேவையானவை:
தும்பை இலை  ஒரு கப், இஞ்சி  ஒரு துண்டு, உளுத்தம் பருப்பு  கால் கப், காய்ந்த மிளகாய்  4, புளி  சிறிதளவு, உப்பு  தேவையான அளவு, சமையல் எண்ணெய்  2 டேபிள்ஸ்பூன், பெருங்காயம்  கால் டேபிள்ஸ்பூன்.

செய்முறை:
கடாயில் எண்ணெய்விட்டு உளுத்தம் பருப்பு, தும்பை இலை இரண்டையும் தனித்தனியே வறுத்து எடுக்கவும். இஞ்சி, நறுக்கிய காய்ந்த மிளகாய், பெருங்காயம் இவற்றை விழுதாக அரைத்துக்கொள்ளவும். வறுத்த தும்பை இலை, உளுத்தம் பருப்பு அரைத்து, இதனுடன் இஞ்சி விழுதையும் சேர்த்து, நன்றாகக் கலக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு தாளித்து சூடாக பரிமாறவும்.
சித்த மருத்துவர். சக்தி சுப்பிரமணி
தும்பை விதையை வாங்கித் தொட்டியில் வைத்தால், தும்பைச் செடி எளிதாக வளரும். தும்பைச்சாறு எந்த பூச்சிக்கடிக்கும் விஷ முறிவாக செயல்படும். தும்பை இலைத் துவையல் குழந்தைகளின் வயிற்றில் உள்ள நச்சுக் கிருமிகளைக் கொல்லும் தன்மை கொண்டது. நல்ல ஜீரண சக்தியைத் தரும்.