40க்கு மேலும் நலமாக வாழ... !
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F-XmhWPaSKK4g%2FVFSCmKkJwVI%2FAAAAAAAAOyM%2FCQs31dQxbxQ%2Fs1600%2F1111.jpg&hash=914ef1a78a76e53b294a866e1dc7579952446212)
உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்தால்தான் ஆரோக்கியமாக இருக்க முடியும். உங்களுக்குப் பிடித்த விளையாட்டை தினம் ஒரு அரை மணி நேரம் விளையாடுங்கள். விளையாட்டும் உடற்பயிற்சிதான்.
புகை, மது இரண்டுக்கும் அடிமை ஆகாதீர்கள்.
எப்போது மனசை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள். வீண் கவலைகளுக்கு இடம் கொடுக்காதீர்கள். மன அழுத்தம் காரணமாகத்தான் பெரும்பாலான நோய்கள் வருகின்றன. கோபம் வரும் சமயங்களில் பிடித்த பாடலையோ, நகைச்சுவைக் காட்சிகளையோ பார்த்து டென்ஷனைக் குறையுங்கள்.
வயதாகிறதே என்று எண்ணாதீர்கள். உங்களைவிட வயது குறைந்தவர்களிடம் நட்பு பாராட்டுங்கள். உடலுக்குத்தான் வயது அதிகரிக்குமே தவிர, மனதுக்கு அல்ல.