FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on October 31, 2014, 10:44:37 PM

Title: காதல் தூவானம் 3
Post by: thamilan on October 31, 2014, 10:44:37 PM
என் சுவாசக் காற்றாக நீ
அதனால் தான்
உன்னை காணாமல்
அடிக்கடி மூச்சித்திணறல்



கோயிலை சுற்றுபவன்
பக்தனாம்
என் காதல் தேவதையை
சுற்றும் நான்
பித்தனாம்
 


உன்னைக் கண்டு
ஒவ்வொருவரும்
வெளிவிடும் வெப்ப மூச்சால்
புவி வெப்பம் அடைவது புரியாமல்
விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்
ஓசானில் ஓட்டையாம்



தனியான எனக்கு
எந்த சிரமமும் இல்லாமல்
துணையாக வரும்
உன் நினைவுகள்
நான் வீட்டை அடைத்தாலும்
திரும்பிப் போகாமல்
வீட்டுக்குள்ளும் நுழைகிறது
அழையா விருந்தாளியாக
 
Title: Re: காதல் துவானம் 3
Post by: aasaiajiith on November 01, 2014, 10:33:32 AM
வணக்கம் !!

பதிப்பென்னவோ நன்றாகத்தான் ...

தலைப்பே தவறாய் .... துவானம் - தூவானம்

கோயிலை சுற்றுபவர்கள் - பன்மை
பக்தனாம் - ஒருமை

முரண்பாடு கவனிக்கவும் !!

வாழ்த்துக்கள் !!
Title: Re: காதல் தூவானம் 3
Post by: thamilan on November 01, 2014, 12:22:19 PM
தவறுகளை சுற்றிக் காட்டியதற்கு நன்றி அஜித்