FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on October 31, 2014, 06:46:21 PM
-
மணத்தக்காளி பொரிச்ச கூட்டு செய்முறை !
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fmmimages.maalaimalar.com%2FArticles%2F2013%2FAug%2F03377741-77cd-4dc1-ba96-de900be2e83b_S_secvpf.gif&hash=7b74431f71853fc19d6b313e8af6d52b9fb39ee7)
தேவையானவை:
மணத்தக்காளி கீரை - 1 கட்டு,
பாசிப் பருப்பு - 1 கப்,
காய்ந்த மிளகாய் -4,
தேங்காய்த் துருவல் - கால் கப்,
உளுந்து - 2 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை,
கடுகு, நெய் - தலா 1 டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவைக்கு.
செய்முறை:
மணத்தக்காளி இலைகளைச் சுத்தம் செய்து, நறுக்கி, வேக விடவும். பாசிப் பருப்பை வேக வைத்து எடுக்கவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், உளுந்து ஆகியவற்றை வறுத்தெடுக்கவும்.
ஆறியதும், இவற்றுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து நைசாக அரைக் கவும். வேக வைத்த கீரை, அரைத்த விழுது, வேக வைத்த பாசிப் பருப்பு இவற்றுடன் போதுமான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். கெட்டியானதும் நெய்யில் கடுகு, பெருங்காயம் தாளித்துச் சேர்த்து இறக்கி வைக்கவும்.
சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ளலாம். வாய்ப்புண், வயிற்றுப் புண்ணை ஆற்றும் சக்தி மணத்தக்காளிக்கு உண்டு.