FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on October 30, 2014, 09:12:22 PM
-
முர்தபா செய்யும் முறை:-
(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xaf1/v/t1.0-9/303558_204133389718004_1611716828_n.jpg?oh=edf5b027d77d4ab43ad387e6102fc956&oe=54E7B42D&__gda__=1424784380_5b02927d7f0999340474e1ae6348a178)
தேவையானவை:-
மாவு தயாரிக்க:-
----------------------
மைதா - அரை கிலோ
நெய் - 2 தேக்கரண்டி
சோடா உப்பு - ஒரு சிட்டிகை
உப்பு - அரை தேக்கரண்டி
தண்ணீர் - தேவையான அளவு
உள்ளடம் செய்ய(stuffing):-
-----------------------------------
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2
பொடியாக நறுக்கிய கேரட் - 2
பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு - ஒன்று
வேகவைத்த இறைச்சி - ஒரு கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒன்று
வேக வைத்த பச்சை பட்டாணி - ஒரு கப்
முட்டை - 3
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:-
தேவையான அனைத்தையும் தயாராய் வைக்கவும்.
மாவில் உப்பு, சோடா உப்பு போட்டு கலந்து அதில் நெய்யை காய்ச்சி ஊற்றி தேவையான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து தனியாக வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து முதலில் கேரட் மற்றும் உருளையை போட்டு கொஞ்ச நேரம் வதக்கவும்.
பின் அதனுடன் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.
கடைசியாக கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், பட்டாணி, இறைச்சி மற்றும் உப்பு சேர்த்து வதக்கி அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும்.
மாவை எலுமிச்சை அளவு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அதில் எண்ணெய் தடவி வைக்கவும். முட்டைகளை ஒரு கோப்பையில் கலக்கி வைக்கவும்.
ஒரு உருண்டை மாவை எடுத்து அதை மெல்லியதாக தேய்த்து அதன் நடுவில் செய்து வைத்திருக்கும் உள்ளடத்தை கொஞ்சம் வைக்கவும்.
அதன் மேலே கலக்கி வைத்திருக்கும் முட்டையை கொஞ்சம் ஊற்றவும்.
மாவை மேலும் கீழுமாக மடக்கவும். பின் பக்க வாட்டையும் மடக்கவும்.
சதுர வடிவில் வரும்.
பின் அவற்றை எடுத்து தவாவில் போட்டு இரண்டு பக்கமும் திருப்பி போட்டு பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும்.
சுவையான முர்தபா தயார்
மாவை வளத்தும் போது எண்ணெய் ஊற்றி வளத்தவும். முர்தபா சுடும் போது அவ்வப்போது சுற்றிலும் எண்ணெய் ஊற்றி திருப்பி திருப்பி போட்டு சுடவும். வெஜிடேரியனாக இருந்தால் இறைச்சி மற்றும் முட்டை சேர்க்காமல் செய்யலாம். தவாவில் ஒவ்வொன்றாக போட்டும் சுடலாம். பெரிய தவாவாக இருந்தால் ஒரே நேரத்தில் 4,5 போட்டு சுடலாம்.....