FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: supernatural on October 28, 2014, 08:22:28 PM

Title: கையூட்டின்(இலஞ்சம்) கைசேதம்
Post by: supernatural on October 28, 2014, 08:22:28 PM
கம்பீரத்தின் உச்சமாய்
அரும் புகழின் மிச்சமாய்
மிகைமிகுந்த உயரமாய்
சிறிதும் சரியா சிறப்பதன்
சீர் மிகு இருப்பினில் ...
சற்றே கனத்த செருக்கினில்
மிடு மிடுக்காய் நின்றுவந்த
11 அடுக்குமாடி கட்டிடமதும்
வெட்கப்பட்டு,வேதனைப்பட்டு
பெருத்த வருத்தப்பட்டு
ஓர் நாள் நாண்டு கொண்டு
மாண்டே போனது
கொடும் கையூட்டு பெறப்பட்டு   
தரப்பட்ட பட்டாவினில்
பகட்டாய் தான் கட்டப்பட்ட
சேதி கேட்டு .....
Title: Re: கையூட்டின்(இலஞ்சம்) கைசேதம்
Post by: aasaiajiith on October 31, 2014, 05:03:57 PM
சிந்தனை அதி சிறப்பு !!

வாழ்த்துக்கள் !!
Title: Re: கையூட்டின்(இலஞ்சம்) கைசேதம்
Post by: Maran on October 31, 2014, 08:14:37 PM


நீங்கள் சென்னை போரூர் அடுக்கு மாடி கட்டிட இடிபாடு வழக்கை குறிப்பிட முயன்று இருக்கிறிர்களா என தெரியவில்லை..!

நல்ல பதிவு நண்பா,

‘பெயர் மாற்றஞ் செய்யப்பட்ட
கையூட்டெனும் பையூட்டு
சன்மானமான இலஞ்சம்’

ஊழல் பற்றிய ஓர் உரையாடலில் ஒருவர் சொன்னார் - "இந்திய ஊழலுக்கு நம் சமூகப் பின்னணியும் ஒரு காரணம்!". குறுக்கு வழியில் காரியம் சாதிப்பது காலம் காலமாகவே நம்மிடம் இருக்கும் ஒரு பயக்க வயக்கம்.  :) தெரிந்தவரை வைத்துக் காரியம் சாதிப்பது, சொந்தக்காரர் வைத்துக் காரியம் சாதிப்பது, குடும்பப் பின்னணியை வைத்துக் கூடுதல் பலன் அடைவது, அன்பளிப்புக் கொடுத்துக் காரியம் சாதிப்பது... இப்படி சமூகத்தில் சமநிலை என்பது எப்போதுமே நம்மிடம் இருந்ததில்லை. எனவேதான் ஊழல் நம் இரத்தத்தில் ஊறிய ஒன்றாக இருக்கிறது. "'எல்லோரும் சமம்!' என்பதே மேற்கத்தியச்  சிந்தனை. நமக்கெல்லாம் அது ஒத்து வராது!" என்று அடித்துச் சொல்கிறார்கள் சில மண்ணின் மைந்தர்கள்.

 

என்னத்தச் சொல்ல?

நம்மால் சமத்துவத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றால் ஊழலை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். குப்பனும் சுப்பனும் ரமேஷுக்கும் சுரேஷுக்கும் சமம் இல்லை என்றால், குப்பனும் சுப்பனும் ஏமாற்றப் படத்தான் செய்வான். ஏமாந்து விட்டு, வாய்ப்புக் கிடைக்கும் போது காதைக் கட்டி அறையத்தான் செய்வான். அவன் மேலே வந்தால், அவனும் ரமேஷையும் சுரேஷையும் ஏமாற்றும் வழிகளைத்தான் பார்ப்பான். உடன் இருக்கும் தம் மக்களையும் சேர்த்து ஏமாற்றுவது தவறில்லை; அதுதான் வென்றவர்களின் வாழ்க்கை முறை - வெற்றிக்கான சூத்திரம் என்று விளக்கம்தான் கொடுப்பான்.

கையுட்டு ஆதிகாலம் தொட்டே இருந்து வருகிறது.. லஞ்சம் வாங்காதோர் இருந்தாலும் அவரை கெடுப்பது மக்கள்தான்,

திருட வேண்டும் என்று திட்டம் போட்டே வருகிறவர்களை விடுங்கள். அவர்கள் எல்லாச் சமூகங்களிலும் இருக்கிறார்கள். அவர்களை இனம் கண்டு வீழ்த்துவதும் ஓரளவு எளிது. ஆனால், கனவுகளோடு சாதிக்கப் புறப்படுபவனையும் சமூகத்தைச் சீர்படுத்தக் கிளம்பியவனையும் கூட பணம், பதவி, புகழ் போன்ற போதைகளைக் கொடுத்துப் பாழாக்குவது - திசை திருப்புவது சமூகமே. அதைப் பல முறை பார்த்து விட்டோம் வரலாற்றில். எதற்காக மேலே வந்தோம் என்பதை மறந்து, மேலே இருப்பதே அவர்களின் முதன்மைக் குறிக்கோளாக ஆவதற்கு அவர்களுக்கு நாம் கொடுக்கும் அதீத மரியாதையும் காரணம்.


Title: Re: கையூட்டின்(இலஞ்சம்) கைசேதம்
Post by: supernatural on November 02, 2014, 04:26:08 PM
கருத்திற்கு நன்றிகள் !!