FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on October 28, 2014, 08:09:10 PM

Title: ~ இதயத்தை பலப்படுத்தும் சீதாப்பழம் :- ~
Post by: MysteRy on October 28, 2014, 08:09:10 PM
இதயத்தை பலப்படுத்தும் சீதாப்பழம் :-

(https://scontent-b-sjc.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/p235x350/532894_811536725535311_3985531710621843575_n.jpg?oh=acb5de12985d71dca17fdfeabe0cddbb&oe=54ADC429)


கஸ்டர்டு ஆப்பிள் என்றும் பட்டர் ஆப்பிள் என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சீதாப்பழம் சுவை மிக்க இனிய பழமாகும். குளூகோஸ் வடிவில் நிறைந்த அளவு சர்க்கரைச் சத்தைக் கொண்டிருக்கும் இப்பழம் குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படுகிறது.
வெப்பம் மிகுந்த பகுதிகளில் எளிதாக வளரும் சீதா சிறு மர வகையைச் சார்ந்தது.

சீத்தாப்பழம் தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது. சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது.

இதன் தாவரவியல் பெயர் Annona squamosa என்று பெயர். சீத்தாப்பழத்தில் நீர்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச்சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன.

மருத்துவ பயன்கள்:

சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். மலச்சிக்கல் நீங்கும்.

சீத்தாப்பழச்சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும்.

இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவரை புண்கள் ஆறும்.

விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்து விடும்.

சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.

சீத்தாப் பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது.

சீத்தாப்பழ விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது.

சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்துவர எலும்பு உறுதியாகும். பல்லும் உறுதியாகும்.

சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு, இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து இதோடு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்துவர தலை குளிர்ச்சி பெறும். முடியும் உதிராது. பொடுகு காணாமல் போகும்.

சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். காசநோய் இருந்தாலும் மட்டுப்படும்.

100 கிராம் சீதாப்பழத்தில் அடங்கியுள்ள சத்துக்களின் உணவு மதிப்பீடு

ஈரப்பதம்-70.5%, புரதம்-1.6%, கொழுப்பு-0.4%, மணிச்சத்து-0.9%, நார்ச்சத்து-3.1%, கால்சியம்-17மி.கி., பாஸ்பரஸ்-47மி.கி., இரும்புச்சத்து-4.31மி.கி., வைட்டமின் ‘சி’-37மி.கி., வைட்டமின்’பி’ காம்ப்ளக்ஸ் சிறிதளவு, மாவுச்சத்து-23.5%.,கலோரி அளவு-10.4% ஆகும்.

பேன் தொல்லைக்கு

சீதாப்பழத்தின் விதைகளை சிறிதளவு சீயக்காய் அறைக்கும் பொழுது சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டு வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து குளித்து வர பேன்கள் நீங்கும்.