FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on October 28, 2014, 08:40:29 AM
-
கூறி இருக்கலாம் நானோ
அல்லது நீயோ
நம் காதலை மற்றவரிடம்
இல்லை
ஒரு கண்ணசைவிலோ
இல்லை
ஒரு உதடசைவிலோ
கூறி இருக்கலாம் நம் காதலை
என்னை பார்த்ததும்
நிலத்துடன் பேசும் உன் விழிகளில்
நான் எதை புரிந்து கொள்வது
உன்னை பார்க்கும் போது
அலைபாயும் கூந்தலும்
கதை பேசும் காது ஜிமிக்கியும்
என்னை வாய் இருந்தும்
ஊமையாக்கி விடுகின்றனவே
முகம் பார்க்கும் கண்ணாடி
முகம் என்பர்
உன் முகம் பார்க்க
என் கண்ணாடியை துடைத்துப் போட்டிருப்பேன்
பல முறை
ஒரு முறை
தலை நிமிர்ந்து பார்த்திருந்தால்
என் காதலை கண்டிருப்பாய்
என் கண்களில்
உன் கன்னச் சிவப்பில் கண்டிருப்பேன்
நானும் உன் காதலை
-
சொல்லாத காதல் தேன்கூட்டைப் போன்றது
அதை கலைத்தால்
ஒன்று காதல் கைகூடலாம்
இல்லை தேனி கொட்டவும் செய்யலாம்
:) அழகான காதல் உணர்வு கவிதை நண்பா...
பிப்ரவரி 14 க்கும்,
பிரிதொரு நாள் வரும் பிறந்த நாளுக்கும்
பரிசுகள் வாங்க மெனக்கெட்டதில்லை...
உன் நினைவை சொல்லும்
கடிதங்களும் , காதல் பரிசுகளும்
இல்லை என்னிடம்...
நீ போகும் பாதையில் சிந்தி செல்லும்
புன்னகையையும், பூக்களையும்தான்
சேர்த்து வைத்து இருக்கிறேன்...
தெற்று பல் தெரிய சிரிக்கும்
உன் முகம் மட்டும்தான் நெஞ்சில்
இருக்கிறது ஞாபகார்த்தமாய்...
இருந்தாலும் சந்தோசமாகத்தான் இருக்கிறேன்
சுகமாய்த்தான் இருக்கிறது இந்த தனிமையும்...
சொல்லாத காதலும் சொர்க்கம்தான்
நீ எனக்கில்லை என சுடும் அந்த நொடிகளை தவிர...!!!
-
guruji pinrel pongol