FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on October 25, 2014, 09:05:43 PM

Title: புரியாத புதிர்
Post by: thamilan on October 25, 2014, 09:05:43 PM
புரிந்து கொள்ளத்தான்
முயலுகிறேன் ஆனாலும்
முடியவில்லை இந்த உலகை

சொகுசாக செலவழித்தால்
ஊதாரியாம்
செலவழிக்காமல் மிச்சம் பிடித்தால்
கருமியாம்

ஆத்திரப்பட்டால்
முன்கோபியாம்
அமைதியாக இருந்தால்
கோழையாம்

தெரிந்ததை சொன்னால்
அதிகபிரசங்கியாம்
தெரியாது என்று சொன்னால்
அடிமுட்டாளாம்

இருக்கிறது என்று சொன்னால்
தட்பெருமைக்காரனாம்
இல்லை என்று சொன்னால்
வேசதாரியாம்

உரக்கப் பேசினால்
அரட்டைக்காரனாம்
அடக்கி வாசித்தால்
ஊமைக்கோட்டானாம்

காதலித்த பெண்ணை கைபிடித்தால்
ஒடுகாலியாம்
கைவிட்டு விட்டால்
காமாந்தக்காரனாம்

புரியாத புதிர் இந்த
உலகம் எனக்கு 
 
Title: Re: புரியாத புதிர்
Post by: Maran on October 25, 2014, 09:50:48 PM


வாழ்க்கை
சோகம் மகிழ்ச்சி தந்து
உன்னை உனக்கு எதிரியாக்கும்
பார்த்து சிரிக்கும்.

சோகங்கள் குவிந்து
மனதெங்கும்  நிரம்பி வழிய
உடலெங்கும் சோக விசம்
பரவி மனதை உடைத்து ..
அழுத்துகிறது
உதவி உதவி !

அழுகை முட்டிய நாட்கள்
நீண்டு சிரிக்கின்றன
என்னை பார்த்து
காரணமின்றி ..

புரியாத புதிர்
வாழ்க்கை ..!

அருமை நண்பா...!


Title: Re: புரியாத புதிர்
Post by: thamilan on October 25, 2014, 11:04:23 PM
கவிதைக்கு கவிதையால் அழகு சேர்த்து உள்ளீர்கள். நண்பரே. நன்றி