FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on October 24, 2014, 04:30:59 PM
-
திடிரென முகம் தடவி பறக்கும்
வண்ணத்துப் பூச்சி போல
பால்வாடை மாறாத பச்சிளம் குழந்தையின்
முத்தத்தைப் போல
காத்து குடையும்
பறவையின் இறகு போல
தலை குனிந்தே நடக்கும் உனது
ஓரக்கண் பார்வையும் சுகமானது
கண்ணீர் பூக்களால் உன்னை
ஆராதிக்கின்றேன்
உன்னை என்னை உனது
கூந்தலில் சூடிக்கொள்ளும்
மலராக ஏற்றுக்கொள்
கல்லறை மலராக
மாற்றி விடாதே
மகிழ்ச்சியால் திக்குமுக்காடி
சிரித்துச் சிரித்து நுரை தள்ளியபடி
தலை கனத்து
தலைகால் புரியாமல்
ஓடிக் கொண்டிருக்கிறது
தினந்த்தோறும் நீ குளிக்கும்
ஆறு
என் ஜன்னல் ஓரம்
நான் வைத்தேன் ரோஜாச் செடி
செடி இல்லாமல்
ரோஜா பூப்பதென்னவோ
உன் ஜன்னலில் தான்
-
அருமை நண்பா,
கவிதைகளையெல்லாம் தொகுத்து புத்தகமாக அச்சிடுங்கள். வாழ்த்துக்கள்.
-
நன்றி மாறன்