FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on October 20, 2014, 08:39:46 PM

Title: காதல் துவானம்
Post by: thamilan on October 20, 2014, 08:39:46 PM
கைரேகை ஜோதிடம்
தெரியாதெனினும்
என் கைகளுக்கு கொடுத்திருக்கிறாய்
உன் பட்டுப் போன்ற கையை

குட்டிப் போடாதெனத்
தெரிந்தும்
புத்தகத்தினுள் மைலிறகு
வைக்கும் குழந்தையைப் போல



உயிர் எழுத்துக்கள்
பன்னிரண்டு
என்பது பொய்
உனது பெயர்
மூன்று எழுத்துக்கள் தானே
 


நான்  என்ன சொன்னாலும்
தலையாட்டிக் கேட்டுக் கொண்டிருக்கிறது
உன்னைப் போலவே
உனது ஜிமிக்கி
 


யார் முதல்லில் செல்வதென
ஓட்டப் பந்தயமே
நடத்தி விடுகின்றன
உன்னை பார்க்க
நான்
வரும் போது
எனது
இரண்டு கால்களும்
 
Title: Re: காதல் துவானம்
Post by: CuFie on October 21, 2014, 09:26:07 AM
guruji seme seme pinitel pongol