FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: ஸ்ருதி on December 14, 2011, 06:56:15 AM

Title: உடலில் சோர்வு ஏன் ஏற்படுகிறது?
Post by: ஸ்ருதி on December 14, 2011, 06:56:15 AM
    சில நபர்கள் வெகு சீக்கிரமாக சோர்வடைந்து விடுவர். அதிக வேலைப்பளு, தூக்கமின்மை போன்ற காரணங்களால் சோர்வு ஏற்படுகிறது.

    தூக்கமின்மை: குழந்தைகளுக்கு எட்டு முதல் பத்து மணி நேரமும், பெரியவர்களுக்கு ஆறு முதல் எட்டு மணி நேர தூக்கம் அவசியம்.

    தூக்கத்தில் மூச்சுவிட மறத்தல்: இந்த நிலை மிகவும் குண்டான, புகை பழக்கம் உள்ளவர்களுக்கு வரும். உறக்கத்தில் அடிக்கடி மூச்சு நின்று நின்று வருவதால் இவர்கள் நாள் முழுதும் சோர்வாகவே இருப்பார்கள். எட்டு மணி நேரம் தூங்கினாலும் இரண்டு மணி நேரம் தூங்கிய உணர்வே இருக்கும்.

    மாறுபட்ட உணவு: காலை உணவு சாப்பிடாமல் இருத்தல், சரிவிகித உணவு உண்ணாமை, நேரம் தவறி சாப்பிடுதல், அதிகபடியான அசைவ உணவு, உணவு அலர்ஜி இதற்கு மருத்துவம் கட்டாய காலை உணவு, பழங்கள், அளவுடன் அசைவம், அலர்ஜி உள்ள உணவை தவிர்த்தல்.

    ரத்த சோகை: பெண்களுக்கு, குழந்தைகளின் சோர்வுக்கு மிக முக்கிய காரணம் இதற்கு இரும்புச் சத்துள்ள உணவை உட்கொள்ள வேண்டும்.

    தேநீர்: கொஞ்சம் கொஞ்சமாக நிறைய தடவை குடிக்கும் தேநீர் ரீ போன்றவை முதலில் ஒரு தற்காலிக உற்சாகம் தந்து பின் இறுதியில் சோர்வையே தரும்.

    நீரிழிவு நோய்: 35 வயதை கடந்தாலே இதுவும் ஒரு சோர்வுக்கு ஒரு காரணம்.

    உடலில் நீர், உப்பு பற்றாகுறை: போதிய அளவில் நீர் குடிக்காமல் இருப்பது மற்றும் வியர்வையில் நீர், உப்பு இழப்பு இதற்குரிய மருத்துவம். ஒரு நாளைக்கு 3 லிட்டர் நீர் குடித்து வர வேண்டும்

Title: Re: உடலில் சோர்வு ஏன் ஏற்படுகிறது?
Post by: Global Angel on December 15, 2011, 05:15:03 AM
நல்ல தகவல் சுருதி ... பலருக்கு இரும்புசத்து குறைபாடு காணபடுவது வருந்த தக்கது
Title: Re: உடலில் சோர்வு ஏன் ஏற்படுகிறது?
Post by: RemO on December 15, 2011, 01:31:24 PM
நல்ல தகவல் சுருதி