FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on October 18, 2014, 07:57:00 PM

Title: ~ அம்மா ரெசிப்பி; புத்துணர்வு தரும் வெந்தயக்களி ~
Post by: MysteRy on October 18, 2014, 07:57:00 PM
அம்மா ரெசிப்பி; புத்துணர்வு தரும் வெந்தயக்களி

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Fdoctor%2F2014%2F11%2Fywvlnj%2Fimages%2Fp61.jpg&hash=227c7c2a94d3ad039e2d4a83ad6afc1ccc962849)

''வெந்தயக்களியின் சுவையும் வாசமும் சாப்பிடத் தூண்டும். வெந்தயம், பனை வெல்லம் உடல் சூட்டைக் குறைக்கும் என்பதால், வீட்டில் அடிக்கடி செய்வேன். என் மகன் இதை அல்வா என்று நினைத்து மிகவும் ரசித்து ருசித்துக் கேட்டு வாங்கிச் சாப்பிடுவான்' என்கிற காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சு.சிவசங்கரி, வெந்தயக்களி செய்யும் முறையை விளக்கினார்.

தேவையானவை:
அரிசி  ஒரு கப், உளுத்தம் பருப்பு, வெந்தயம்  தலா கால் கப், கருப்பட்டி  ஒன்றரை கப், நல்லெண்ணெய்  100 மி.லி.

செய்முறை:
அரிசியை நன்றாக ஊறவைத்து விழுதாக அரைக்கவும். வெந்தயம், உளுந்தை ஊறவைத்து நுரைக்க அரைக்கவும். கருப்பட்டியில் சிறிது தண்ணீர் விட்டு பாகு போல் காய்ச்சி வடிகட்டவும். பாகு கொதிக்கும் போது உப்பு போட்டுக் கலந்து அரைத்த மாவு, வெந்தயக் கரைசலை ஊற்றி,் தொடர்ந்து கிண்ட வேண்டும். சிறிது நல்லெண்ணெய் ஊற்றி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது இறக்கவும்.

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Fdoctor%2F2014%2F11%2Fywvlnj%2Fimages%2Fp61a.jpg&hash=ae04902d0c46a963bcb98c2534686f8a69e49ea1)

ரமேஷ், சித்த மருத்துவர், திருநெல்வேலி: வெந்தயக்களியில் சேர்க்கப்படும் கருப்பட்டியால் இரும்புச் சத்து கிடைக்கிறது. உளுத்தம் பருப்பு மலச்சிக்கல் வராமல் தடுக்கும். மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்ற உணவு இது. இடுப்பு எலும்பு வலுப்படும். கால்சியம், வைட்டமின் சத்துக்கள் நிறைந்த வெந்தயக்களியை அனைவருமே சாப்பிடலாம். சர்க்கரை சேர்க்காமல் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிடுவதால், உடலுக்குத் தேவையான புத்துணர்ச்சி கிடைக்கிறது. உடல் எடையைக் கூட்ட விரும்புபவர்களுக்கு இது மிகச் சிறந்த உணவு.